ஆஸ்கர் விழாவில்.. இஸ்ரேல் போர் நிறுத்த கோரிக்கை! சிவப்பு பேட்ச் அணிந்து கவனத்தை ஈர்த்த பிரபலங்கள்
நியூயார்க்: 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த பிரபலங்கள் சிலர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சிவப்பு நிற பேட்ச் அணிந்து வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
பார்பி படத்தில் வரும் காட்சியுடன் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், முதல் விருதை பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் தட்டிச் சென்றிருக்கிறது. இந்த திரைப்படம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த படத்தொகுப்புக்காக தனது முதல் விருதை வென்றிருக்கிறது. பெண் எடிட்டர் 'ஜெனிஃபர் லேம்' இந்த விருதை பெற்றிருக்கிறார். அதேபோல சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் 'ஹோய்ட் வன் ஹோய்ட்மா' வென்றிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில், விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் சிலர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சிவப்பு நிற பேட்ச் அணிந்து வந்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல பாடகராக அறியப்படும் 'பில்லி ஐலிஷ்' உள்ளிட்ட பிரபலங்கள் சிவப்பு நிற பேட்சை அணிந்து வந்திருந்தனர். இதற்கு முன்னர் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் பிரபலங்கள் இந்த பேட்சை அணிந்திருந்தனர்.
போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் தொடரும் என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்காவும் துணை போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் ஹாலிவுட் திரைப்பட துறையை சேர்ந்த சுமார் 400 பேர் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனாலும், பைடன் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஏதும் வெளியிடவில்லை.

இந்த போரில் இதுவரை 30,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது காசாவில் பஞ்சம் உருவாகியுள்ளது. பசியால் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையை உடனடியாக மாற்ற போர் நிறுத்தம் தான் தீர்வு என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா கொண்டு வரும்போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தள்ளுபடி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications