டிரம்ப் எடுத்த எதிர்பாரா முடிவு! ஆட்டம் கண்ட முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள்.. என்னாச்சு?
நியூயார்க்: இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்த நிலையில், முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. டிரம்பின் இந்த வரி விதிப்பால் வெளிநாட்டு கார்களின் விலை உயரக்கூடும் என இறக்குமதி செய்யும் கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யாமல் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்த புதிய வரி முறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும், ஆண்டுக்கு 100 பில்லியன் வருமானத்தை ஈட்டும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

டிரம்பின் இந்த வரி உயர்வால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை உயரும். இதனால் கார் விற்பனை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 8 மில்லியன் கார்கள் மற்றும், இலகு ரக டிரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு 244 பில்லியன் டாலர் ஆகும். மெக்சிகோ, ஜப்பான், தென்கொரியா உளிட்ட நாடுகளில் இருந்துதான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.
அதேபோல வாகன உதிரி பாகங்கள் 197 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதியாகிறது. இது பெரும்பாலும் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு செக் வைக்கும் விதமாகவே டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது. டிரம்ப் விதித்த புதிய வரி விதிப்பால் முன்னணி கார் நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமும் இந்த அலையில் தப்பவில்லை.
டெஸ்லா நிறுவனம் பெரும்பாலான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதால் அவற்றின் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. இது தவிர வாகன உற்பத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்தது. ஃபோர்டு மற்றும் கிரைசுலர் குழும நிறுவன பங்குகளும் 4.5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன.
ஆசிய சந்தைகளில் டொயோட்டா மோட்டார், ஹோண்டா, ஹூண்டாய் நிறுவன பங்குகள் 3 சதவீதம் சரிந்தன. டெஸ்லா நிறுவனம் அனைத்து கார்களையும் அமெரிக்காவில் உற்பத்தி செய்து அங்கேயே விற்பனை செய்தாலும் சில உதிரி பாகங்களை இறக்குமதி செய்கிறது. இதனால், அந்த நிறுவனத்தின் பங்குகளும் 1.3 சதவீதம் குறைந்தது. தற்போதைய வரி விதிப்பு டெஸ்லா நிறுவனத்திற்கு சாதகமாக இருக்க கூடும் என்று டிரம்ப் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications