பெரிய கிராஷ் வரப்போகுது! பங்கு சந்தை வேண்டாம்.. தங்கம்தான் ஒரே பாதுகாப்பு! வல்லுனர் விடுத்த வார்னிங்
சென்னை: உலக அளவில் பங்கு சந்தைகளில் அடுத்த சில மாதங்கள் கடுமையானதாக இருக்கும். உலக அளவில் பங்குசந்தைகள் அடுத்த சில காலம் தொடர்ந்து சரிவை சந்திக்கும் என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
உலக மார்க்கெட் சரிவு காலம் தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் மார்க்கெட் வேகமாக சரிவு அடையும். இதனால் மார்க்கெட்டை விட்டு சில காலம் வெளியே இருங்கள். மாறாக தங்கம், வெள்ளி, பிட்காயின் மீது முதலீட்டை செய்யுங்கள்.
நான் யாரையும் எச்சரிக்கவில்லை என்று சொல்லவேண்டாம். துரதிர்ஷ்டவசமாக, பங்கு மற்றும் பத்திரச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது மில்லியன் கணக்கானவர்கள், குறிப்பாக எனது தலைமுறை பூமர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சொத்துக்கள் அழியும். இதனால் உடனே தங்கம் வெள்ளி பக்கம் செல்லுங்கள் என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.

மிகப்பெரிய சரிவு ஏற்படும்
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று அவர் கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமா தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த ஜூன் மாதம் நடக்கும், என்றுள்ளார்.
தங்கம் விலை உயரும்
இதனால் தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். இதன் அடிப்படையில் பார்த்தால் 2035 டாலர் மதிப்பை உத்தேசமாக வைத்து பார்த்தால் 1 கிராம் தங்கத்தின் விலை 1.15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,758 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,945 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,405 ஆகவும் உள்ளது. அதாவது தங்கத்தின் விலை 10 மடங்கு உயரும் என்று அவர் கூறி உள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications