திடீரென ரத்த நிறத்துக்கு மாறிய நிலா.. வானில் நிகழ்ந்த அற்புதம்.. சந்திர கிரகணத்தை ரசித்த மக்கள்
நியூயார்க்: 2025ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் வானில் நேற்று நிகழ்ந்தது. திடீரென்று ரத்த நிறத்தில் நிலா தெரிந்தது. இதனை பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர். சந்திர கிரகணத்தின்போது நிலா ரத்த நிறத்தில் மாற என்ன காரணம்? இந்த சந்திர கிரகணத்தை யாரெல்லாம் கண்டு ரசித்தனர்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தினமும் வானில் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில் பல நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியாது. அதேவேளையில் சில நிகழ்வுகளை பூமியில் இருந்தபடியே நம்மால் பார்க்க முடியும். அந்த வகையில் 2025ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் நடந்து முடிந்துள்ளது.

அதாவது சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வரும்போது நிகழும் நிகழ்வாகும். அதன்படி சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி வந்தது.
இப்படி வரும்போது சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது விழாது. பூமியில் மட்டுமே விழும். பூமியின் மீது படும் சூரியஒளி நிலவில் எதிரொலிக்கும். அந்த சமயத்தில் அலை நீளம் அதிகமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அப்போது 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என்று அழைக்கப்படும். அதன்படி இப்போது ரத்த நிலாவை உருவாக்கும் சந்திரகிரகணம் நடந்து முடிந்தது.
மார்ச் 13ம் தேதி (அதாவது நேற்று)இரவு 10.57 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கியது. இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணிநேரம் வரை நீடித்தது. இன்று அதிகாலை 2.26க்கு முழு சந்திர கிரகணம் தெரிந்தது. அதிகாலை 3.31 மணிக்கு பிறகு மணி வரை சந்திரகிரகணம் முடிவுக்கு வந்தது. இந்த ரத்த நிலா அமெரிக்காவில் தெரிந்தது. சந்திர கிரகணம் நிகழ்ந்தபோது நம் நாட்டில் பகல் பொழுதாக இருந்தது. இதனால் நம் நாட்டின் எங்கும் இந்த ரத்த நிலாவை பார்க்க முடியவில்லை.
அதேவேளையில் அமெரிக்கர்கள் இந்த சந்திர கிரகணத்தை ரசித்தனர். சூரிய கிரகணம் என்றால் தான் பொதுமக்கள் கண்களை பாதுகாக்கும் சிறப்பு கண்ணாடிகளை அணிந்து பார்க்க வேண்டும். சந்திர கிரகணத்தை சாதாரண கண்களால் பார்க்கலாம் என்பதால் பலரும் நேற்று ரசித்தனர்.
சந்திர கிரகணத்தில் நிலா ரத்த நிறத்தில் மாறியதன் முழு அழகை ரசிக்க பல இடங்களில் தொலைநோக்கிகளை பயன்படுத்தி மக்கள் பார்த்தனர்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று முடிவடைந்த நிலையில் அடுத்த சந்திர கிரகணம் விரைவில் வானில் நிகழ உள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 7 ம் தேதி அடுத்ததாக சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மக்கள் ரசிக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications