கனடா மக்களின்.. தேசிய பக்தியை தூண்டிவிட்ட டிரம்ப்.. அமெரிக்காவின் முடிவிற்கு சரியான ஆப்பு.. போச்சு
நியூயார்க்: கனடாவின் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்த நிலையில் அதற்கு பதிலடியாக கனடா அமெரிக்காவின் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தது. இந்த நிலையில்தான் கனடா மக்களின் தேசிய பக்தியை டிரம்ப் கிட்டத்தட்ட தூண்டிவிட்டுள்ளார் என்றுதான் கூற வேண்டும். கனடாவில் நடக்கும் அரசியல் புரட்சி ஒன்று டிரம்பிற்கும் , அமெரிக்காவிற்கும் எதிராக திரும்பி உள்ளது.
மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது. அமெரிக்கா மீது 25% வரிகளை கனடா விதித்து உள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்.. கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது . அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.
சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.
கனடாவில் நடக்கும் புரட்சி:
இப்படிப்பட்ட நிலையில்தான் கனடாவில் நடக்கும் அரசியல் புரட்சி ஒன்று டிரம்பிற்கும் , அமெரிக்காவிற்கும் எதிராக திரும்பி உள்ளது. அதன்படி கனடாவில் கடைகளில் made in canada என்று போஸ்டர் பொருட்களுக்கு அருகே ஒட்டப்பட்டு உள்ளது.
அதாவது மக்கள் கனடா பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக கனடாவில் கடைகளில் made in canada என்று போஸ்டர் பொருட்களுக்கு அருகே ஒட்டப்பட்டு உள்ளது. அதோடு அமெரிக்க பொருட்களை காட்டி.. இந்த பொருளுக்கு பதிலாக கனடாவில் தயாரிக்கப்படும் இந்த பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இன்னொரு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

கனடாவின் பொருட்களை கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது சிக்கல் ஆகி உள்ளது. அமெரிக்காவில் கனடாவில் பொருட்களை இறக்குமதி செய்து விற்பவர்கள் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பதால் கனடா பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள்.
இதனால் கனடா பொருட்கள் சொந்த நாட்டிலேயே தேங்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்கவே கனடா மக்கள் கனடா பொருட்களை வாங்க வேண்டும். ஏற்றுமதியில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கும் விதமாக உள்ளூர் மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரச்சாரம் அங்கே வைக்கப்பட்டு வருகிறது.
கனடா மக்களின் இந்த திடீர் பிரச்சாரம், வியாபார முறையை அமெரிக்கா எதிர்பார்த்து இருக்காது. கனடாவில் அமெரிக்காவின் பொருட்கள் விற்கப்படாமல் போகும் நிலை இதனால் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முடிவு அமெரிக்காவிற்கே எதிராக திரும்பும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கனடா மக்களின் தேச பக்தியை தூண்டிவிடும் விதமாக டிரம்ப் செய்த முடிவு அமெரிக்காவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications