அதிரடி உத்தரவு.. எகிறும் தொற்று.. இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்தது கனடா.. செப்டம்பர் வரை..!
இந்திய பயணிகள் கனடா வருவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
நியூயார்க்: இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த தொற்றானது அதிகரிக்க இந்தியாவில் இது அதிகமாகி கொண்டே போனது... முதல் அலையைவிட இரண்டாவது அலையால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்ட நிலையில், ஏராளமான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கையில் எடுத்தது..
லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அமல்படுத்தினாலும் சில மாநிலங்களில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலைமை உள்ளது.. எனினும் மொத்தமாக பார்த்தால், தொற்று பாதிப்பின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியா
இந்நிலையில், இந்தியாவில் இருந்து யாரும் தங்கள் நாடுகளுக்கு வரக்கூடாது என ஏற்கனவே சில நாடுகள் அதாவது, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தடை விதித்தன.. அந்தந்த நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை இருந்தாலும், இந்திய பயணிகள் மூலம் அது மேலும் பாதிப்படைந்துவிடக்கூடாது என்று கருதுகின்றன.. அந்த வரிசையில், தற்பாது கனடாவும் சேர்ந்துள்ளது.

பாகிஸ்தான்
கடந்த மாதம் அந்த நாடு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், ''இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் கனடா வர 30 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது என்றும், இந்தியாவில் உள்ள தொற்று வைரஸ் சூழலை ஆய்வு செய்து, கனடா மருத்துவ அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ஆனாலும் சரக்குப் போக்குவரத்து விமானத்துக்குத் தடையில்லை என்றும் கூறியிருந்தது.

போக்குவரத்து
ஆனால், இந்த தடைதான் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது... அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

பிரான்ஸ்
பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது... அதேபோல, இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications