Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறான இடத்தில் கைவச்சிட்டீங்க.. டிரம்ப் செயலால்.. நண்பன் எலான் மஸ்க்கிற்கு.. ஆப்பு வைக்கும் கனடா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயலால் அவரின் நண்பன் எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய அளவில் செக் வைக்க கனடா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளை அதிர வைக்க தொடங்கி உள்ளார். உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு நட்பாக இருக்கும் நாடுகள் மீதே டிரம்ப் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். அதாவது டிரம்பிற்கு நெருக்கமான நாடுகள் என்று பார்த்தால் அதில் கனடா முதல் ஆளாக இருக்கும்.

donald trump canada justin trudeau

கனடா எப்போதும் அமெரிக்கா உடன் இருந்துள்ளது. அமெரிக்காவில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் முதல் ஆளாக கனடாதான் போய் உதவி செய்யும். அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தால் கனடாதான் முதல் ஆளாக போய் உதவி செய்யும். இதுவரை கனடா - அமெரிக்கா ஆகிய நாடுகள் இரட்டை குழந்தைகள் போலத்தான் இருந்துள்ளன. அப்படிப்பட்ட கனடாவை டிரம்ப் பகைத்து உள்ளார்.

கனடாவை பகைக்கும் டிரம்ப்:

கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது.

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

கனடா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.

தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும், என்றுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

நண்பர் எலான் மஸ்க்கிற்கு வைக்கப்படும் செக்:

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயலால் அவரின் நண்பன் எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய அளவில் செக் வைக்க கனடா முடிவு செய்துள்ளது. அதன்படி எலான் மஸ்க்கின் பொருட்களுக்கு அதாவது டெஸ்லா உள்ளிட்ட மஸ்க் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு 100% வரி விதிக்க கனடா ஆலோசனை செய்து வருகிறதாம்.

மஸ்க் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் கனடாவில் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இந்த பொருட்கள் மீது 100% வரி விதிக்க கனடா ஆலோசனை செய்து வருகிறது. கனடாவின் இந்த திட்டம் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+