Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரீனா நெபுலா முதல் தெற்கு ரிங் வரை.. நாசா வெளியிட்ட சுவாரசிய ஜேம்ஸ் வெப் புகைப்படங்கள்! முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த மேலும் சில விண்வெளி புகைப்படங்களை நாசா நேற்று வெளியிட்டது. நேற்று அதிகாலை நாசா மூலம் SMACS 0723 பிரபஞ்ச தொகுப்பு புகைப்படம் வெளியிடப்பட்டது.

Recommended Video

    james-webb-space-telescope-specifications

    13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்ச தொகுப்பின் புகைப்படம் ஆகும் இது. இந்த நிலையில் தற்போது Carina Nebula, WASP-96b, the Southern Ring Nebula, Stephan's Quintet போன்ற பிரபஞ்சங்கள் மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    இந்த படங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருக்கும் அகச்சிவப்பு கதிர் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டது ஆகும். நேற்று நாசாவின் பக்கத்தில் லைவ் ஒளிபரப்பிற்கு இடையில் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்பட்டது. உலகம் முழுக்க இந்த படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. நாசா வெளியிட்ட அந்த புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

    கரீனா நெபுலா

    கரீனா நெபுலா

    நாசா நேற்று வெளியிட்ட புகைப்படங்களில் அதிக கவனம் ஈர்த்தது கரீனா நெபுலா புகைப்படம் ஆகும். நெபுலா என்பது துகள்கள், நட்சத்திரங்கள், வாயுக்கள் அடங்கிய கூட்டு அமைப்பு ஆகும். முன்பே habble தொலைநோக்கி மூலம் இதன் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தாலும், தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த நெபுலாவில் இருக்கும் NGC 3324 என்று பகுதியின் படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டு இருக்கிறது.

    நட்சத்திரம் உருவாகிறது

    நட்சத்திரம் உருவாகிறது

    கரீனா நெபுலா என்பது வானத்தில் இருக்கும் மிகவும் வெளிச்சமான நெபுலாக்களில் ஒன்று ஆகும். பூமியில் இருந்து 7600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது. இது முழுக்க வாயுக்கள் மற்றும் துகள்களால் ஆனது. இதில் பல நட்சத்திரங்கள் உருவாகி வருவதாக நாசா குறிப்பிட்டு உள்ளது. தூசுகள் அடங்கிய மலை பகுதி இது. அதன் மீது வாயுக்கள் நிரம்பி உள்ளன. அங்கு பல நட்சத்திரங்கள் உருவாக்குகின்றன என்று நாசா இதை வர்ணித்து உள்ளது.

    தெற்கு ரிங்

    தெற்கு ரிங்

    அதேபோல் தெற்கு ரிங்கிங் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதுவும் ஒருவகை நெபுலா ஆகும். அதாவது நட்சத்திரம், வாயுக்கள், தூசுகளில் தொகுப்பு. இதன் மத்திய பகுதியில் இருக்கும் நட்சத்திரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டு இருக்கிறது. பூமியில் இருந்து 2000 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த ரிங் போன்ற நெபுலா உள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, எப்படி நட்சத்திரங்கள் உருவாகிறது என்பதை ஆராய்ச்சி செய்து வருவதால் இந்த நெபுலாவையும் ஆராய்ச்சி செய்து வருகிறது. நெபுலாக்களில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது வழக்கம். இந்த தெற்கு ரிங் நெபுலாவின் இரண்டு வகையான அகச்சிவப்பு கதிர் புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருக்கிறது,

    ஸ்டிபன் குயின்டெட்

    ஸ்டிபன் குயின்டெட்

    அதேபோல் பூமியில் இருந்து 290 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஸ்டிபன் குயின்டெட் என்ற பிரபஞ்ச தொகுப்பின் புகைப்படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. இது பெகாஸஸ் என்ற பகுதியில் அமைந்துள்ளது. அருகருகே ஒன்றாக அமைந்து இருக்கும் 5 பிரபஞ்சங்கள் தொகுப்புதான் ஸ்டிபன் குயின்டெட். இதில் 4 பிரபஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று லாக் ஆகி இங்கும் அங்கும் டான்ஸ் ஆடுவது போல சென்று வருகிறது. ஏற்கனவே hubble வெளியிட்ட இதன் புகைப்படத்தை விட இப்போது ஜேம்ஸ் வெப் வெளியிட்ட புகைப்படங்கள் கொஞ்சம் தெளிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    WASP-96b

    WASP-96b

    இது போக WASP-96b எனப்படும் டேட்டா புகைப்படம் ஒன்றையும் நாசா வெளியிட்டுள்ளது. இது ஒரு ஸ்பெக்ட்ரம் புகைப்படம் ஆகும். அதாவது அலைவரிசை புகைப்படம். ஒரு பிரபஞ்சம், அல்லது நெபுலா ஆகிய புகைப்படங்களின் வண்ணங்களை தனி தனி அலைவரிசையாகப் பிரித்து அதை வைத்து அதன் இயல்பை கண்டுபிடிக்க நாசா இந்த முறையை பயன்படுத்தும். WASP-96b என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள மிகப்பெரிய கிரகம் ஆகும். பூமியில் இருந்து 1150 ஒளி ஆண்டுகள் தொலையில் உள்ளது. இதன் அலைவரிசை புகைப்படத்தைதான் தற்போது நாசா வெளியிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+