"ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு

சாதியை சொல்லி திட்டியதாக 2 இந்தியர்கள் மீது புகார் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த நபர் அவர்... 2015-ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் ஒருவர்.. சிஸ்கோ தலைமையகத்தில் சீஃப் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

 caste based discrimination against indian american employee in cisco

இதே நிறுவனத்தில் என்ஜினியரிங் மேனேஜராக வேலை பார்ர்ப்பவர் சுந்தர் ஐயர், மற்றும் ரமணா கொம்பெல்லா. இவர்கள் 2 பேரும் பட்டியலின ஊழியரை சாதியை காட்டி மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.. மன ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள்.. இதுதான் பிரச்சனையாக வெடித்து சான் ஜோஸில் உள்ள கோர்ட் வரை விவகாரம் சென்றிருக்கிறது. பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்கத் தவறியதற்காக சிஸ்கோ நிறுவனம் மீதும் இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது.

இதைபற்றி சிஸ்கோ நிறுவன செய்தி தொடர்பாளர் சொல்லும்போது, "புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் சட்டத்தின்படி வேலை செய்யும் இடங்களில் எல்லாருமே ஒன்றாகவே, சரிசமமாகதான் நடத்தப்படுகிறார்கள்.. நிறுவனத்தின் கொள்கைகளும், சட்டத்துக்குட்பட்டும் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

ஆனால் இவர் சொல்லிவிட்டாலும், உண்மை அது கிடையாது என்கிறார்கள்.. சிலிக்கன் வேல்வியூ என்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்களில் உயர்குடி மக்கள்தான் அதிகம்.. அதனால் அமெரிக்காவே போனாலும் அங்கும் சென்று இந்த சாதியை தூக்கி பிடித்து, தீண்டாமையை உயர்த்தி பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு ரொம்ப வருஷமாகவே உள்ளது என்பதும் நினைவுகூர தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+