பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் பயோ தாக்குதல் நடத்த முயற்சி? மர்ம பார்சலால் பரபரப்பு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நேற்று பேஸ்புக் தலைமையகத்திற்கு வந்த மர்ம பார்சல் ஒன்றால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உலகம் மாற மாற ஆயுதங்களும் மாறும், கருவிகளும் மாறும். ஒரு காலத்தில வில்லை வைத்து சண்டை போட்ட மனித இனம் தற்போது கண்ணுக்கு தெரியாத அணுவை வைத்து சண்டை போடுகிறது. மறைமுகமாக பயோ வார் நடப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில்தான் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகத்தில் முக்கியமான பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த விஷயம்தான் மார்க் ஜுக்கர்பெர்க்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

எப்படி பார்சல்

எப்படி பார்சல்

பொதுவாக பேஸ்புக் தலைமையகத்திற்கு தினமும் வரும் பார்சல்கள் காலை 10 மணிக்கு சோதனை செய்யப்படும். பின் 11 மணிக்கு அந்த பார்சல் யாருக்கு வந்து இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும். அப்படித்தான் நேற்று காலை பேஸ்புக் தலைமையகத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் கெமிக்கல் போன்ற திரவம் இருந்துள்ளது. இதை அங்கு இருந்த அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

என்ன திரவம்

என்ன திரவம்

நெர்வ் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் செரின் என்ற கெமிக்கல் அதில் இருந்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டு இருக்கிறது. இந்த செரின் என்பது பயோ ஆயுதமாக பயன்படுத்தப்படும் திரவம் ஆகும். இதை சுவாசிக்க நேர்ந்தால் மனம் குழம்பி, சில மணி நேரம் நாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் போகும். சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்படும். சிலர் மரணம் அடையும் நிலை கூட ஏற்படலாம்.

எப்படி பயன்பாடு

எப்படி பயன்பாடு

இதனால் கொத்து கொத்தாக பலர் மடிந்த கதையும் இருக்கிறது. பொதுவாக தீவிரவாதிகளை நிலை குலைய வைக்க இதை பயன்படுத்துவார்கள். சிறிய குண்டில் இதை வைத்து, அதை சுடும் போது தீவிரவாதிகள் மயக்கம் அடைவார்கள். அல்லது நிலைகுலைந்து போவார்கள். இதை பேஸ்புக் அலுவலகத்திற்கு நேற்று யாரோ அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் இதை அனுப்பியது யார் என்ற விவரம்தான் இன்னும் வெளியாகவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதனால் நேற்று பேஸ்புக் அலுவலகத்தில் இரண்டு மாடிகளில் இருந்த ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டார்கள் . அங்கிருந்த பொருட்கள் எல்லாம் சோதனை செய்யப்பட்டது. இதை யார் அனுப்பினார்கள், யாருக்கு எதிராக நடத்தப்பட்ட சதி இது என்று விசாரணை நடந்து வருகிறது. பேஸ்புக் அலுவலகத்திற்கு முதல்முறை இப்படி கெமிக்கல் பார்சல் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+