அமெரிக்காவின்.. நரம்பிற்குள் "ஷாக் வேவ்களை" அனுப்பிய சீனா.. அஸ்திவாரத்தை காலி செய்த ஜி ஜின்பிங்!
சென்னை: கார், செமி கண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் சில அரிய வகை தனிமங்கள் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதியை சீனா முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவில் ஷாக் வேவ்களை.. அதாவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏவுகணைகள், காற்றாலைகள், EVகள், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் 90 சதவீதம் பொருட்களை சீனா தடை செய்துள்ளது. சீனாவில் இருந்து இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் புரியும்படி சொன்னால்.. இப்போது இவி கார்கள் உள்ளன. இதில் செமி கண்டக்டர் பயன்படுத்தப்படும்.
ஏவுகணைகள், காற்றாலைகளில் சில முக்கியமான கனிமங்கள், தனிமங்கள் பயன்படுத்தப்படும். இதை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும் நம்பர் 1 நாடு சீனா. ஏனென்றால் இவை எல்லாம் பூமியில் கிடைக்கும் அரியவகை கனிமங்கள். எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்காது. இதை எல்லாம் ஏற்றுமதி செய்யாமல் தடுத்தால் அமெரிக்கா இந்த பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்களை தயாரிக்க முடியாது. முக்கியமாக இவி வாகனங்கள், சோலார் பேனல்கள், பேட்டரிகளை உருவாக்க முடியாது.

சீனாதான் கிங்
உலகளாவிய அளவில் இந்த முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் 60% சீனா கட்டுப்படுகிறது. அதேபோல் உலகளாவிய அளவில் இந்த கனிமங்களை பயன்படுத்தும் செயலாக்கத் திறனில் 85%ஐ சீனா கட்டுப்படுத்துகிறது. மீதமுள்ள திறன் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR காங்கோ) மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக சீன முதலீட்டைக் கொண்ட நாடுகளில் அமைந்துள்ளது. இந்த சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
உண்மையில், பென்டகன் கூட னாவின் இந்த அரியவகை கனிமங்களை நம்பியே உள்ளது. அமெரிக்காவின் F-35 ஜெட் விமானங்களில் நிரந்தர காந்தங்கள், லேசர் இலக்கு அமைப்புகள் மற்றும் ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க சீனாவின் இந்த அரியவகை கனிமங்களை நம்பியே உள்ளது. முக்கியமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள், EVகள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் வரை அவரின் பல தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு சீனாவின் இந்த ஏற்றுமதி அவசியம்.
எத்தனை வகையான கனிமங்கள்
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு 50 கனிமங்களை முக்கியமானதாக வகைப்படுத்துகிறது. அதாவது அரியவகை கனிமங்கள் என்று வகைப்படுத்துகிறது. கோபால்ட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் செம்பு சோலார் பேனல்கள் மற்றும் மின் இணைப்புகளிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, PV பேனல்களில் சிலிக்கான் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக், காலியம் மற்றும் டெல்லூரியம் ஆகியவை சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தடை செய்த சீனா
கார், செமி கண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு பயன்படுத்தத்ப்படும் சில அரிய வகை தனிமங்கள் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதியை சீனா முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், சீனாவிற்கு ஒருநாள் கெடு விதித்துள்ளார். அதற்குள் சீனா தனது கூடுதல் வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications