இதை அமெரிக்கா எதிர்பார்த்து இருக்காது! டிரம்ப்பிற்கு யோசிக்காத இடத்தில்.. ஆப்பு வைத்த "டிராகன்" சீனா
நியூயார்க்: சீனா மீது அமெரிக்கா மேற்கொண்டு உள்ள வர்த்தக போருக்கு சீனா பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. மற்ற நாடுகள் போல அமெரிக்காவை சமாளிக்க வரியை குறைக்காமல்.. சீனா பதிலடி ஆக்சன்களை எடுக்க தொடங்கி உள்ளது.
அதன்படி அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்து உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் உலக வர்த்தக போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி சீனா வழக்கு தொடுத்து உள்ளது.

வர்த்தக போர்
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இன்று வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி இன்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து
இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை
அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார்.
அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை
மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை. நேற்று இரவு டிரம்ப் போட்ட கையெழுத்தில் இருந்து இந்த புதிய வர்த்தக போர் தொடங்கி உள்ளது.
இனி கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இந்த வர்த்தக போருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதில் வரிகளை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சீனா எச்சரிக்கை
நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவிற்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதையடுத்து கடைசிவரை அமெரிக்காவுடன் போராட நாங்கள் தயார். வர்த்தக போரை நடத்த தயாராகி இருக்கிறோம். இந்த வர்த்தக போர்.. அல்லது வரிப்போர்.. அல்லது எந்த விதமான போராக இருந்தாலும் சரி.. அந்த போரை நாங்கள் எதிர்கொள்ள தயார்.
நாங்கள் போரை கடைசிவரை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனாவின் வெளியுறவுத்துறை வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா பதிலடி
ஏற்கனவே அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால்
அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில்
மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications