இந்தியர்களுக்கு H-1B விசா கொடுத்து "நோ யூஸ்.." அமெரிக்காவில் DeepSeek கிளப்பிய புது பஞ்சாயத்து!
நியூயார்க்: சீனாவின் டீப்சீக் (DeepSeek) ஏஐ தொழில்நுட்பம் டெக் உலகை தாண்டி, தற்போது அரசியல் தளத்திலும் சலசலப்பை கிளப்பியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கும், அங்கு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் DeepSeek பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே டிரம்ப் ஒரு மாதிரியான ஆளுனு பேசிக்குறாங்க. இப்படி இருக்கும்போதுதான் DeepSeek உள்ளே புகுந்து குட்டையை குழப்பியிருக்கு. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 1 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சராசரியாக ரூ.86.64 ஆயிரம் கோடி) அளவுக்கு வர்த்தகத்தை இந்த DeepSeek பாதித்திருக்கிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. அதேபோல, அமெரிக்கர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

சீனா உள்ளூர் ஆட்களை வைத்துக்கொண்டு DeepSeek உருவாக்கி நமக்கு ஆட்டம் காட்டுகிறது. ஆனால், நாம இந்தியாவிலிருந்து H-1B விசா மூலம் ஆட்களை இறக்குமதி செய்தும் கூட, சீனாவை முந்த முடியவில்லை என்று அமெரிக்கர்கள் சோசியல் மீடியாவில் பேச தொடங்கியுள்ளனர். இதுதான் தற்போது அங்கு ஹாட் டாப்பிக்.
சீனா எப்படி சாதித்தது?:
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனில் GPUs எனும் சிப் அவசியம். இதை சர்வதேச அளவில் Nvidia எனும் அமெரிக்க நிறுவனம் தரமானதாக உற்பத்தி செய்து விற்று வருகிறது. இதில் பிரபலமானதாக மூன்று வெரைட்டி இருக்கிறது.
1.H800 GPUs
2.A100 GPUs
3.H100 GPUs
இந்த மூன்றில் H800 GPUs அடிப்படையான தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். 100சிசி பைக் மாதிரி. லோக்கலில் ஓட்டிக்கொள்ளலாம். ரொம்பதூரம் போக முயன்றால் முக்கும். AI தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாட வேண்டும் எனில் நமக்கு 250சிசி பைக் தேவை. அதுதான் A100 GPUs, H100 GPUs. ஆனால் சீனாக்காரன் AI தொழில்நுட்பத்தில் முந்திவிட கூடாது என்பதற்காக அமெரிக்க அரசு A100 GPUs, H100 GPUs சிப்களை சீனாவுக்கு விற்க கூடாது, வேண்டுமெனில் H800 GPUs-ஐ மட்டும் வித்துக்கோ என Nvidia நிறுவனத்திற்கு உத்தரவு போட்டது.
ஆக இப்போதைக்கு சீனாவின் முயற்சியை முறியடித்துவிட்டோம் என்று அமெரிக்கா நிம்மதி பெருமூச்சு விட்டபோதுதான், DeepSeek தடையை உடைத்து AI உலகில் நுழைந்தது.
இந்த சாதனைக்கு காரணம் சீனாவின் மூளைதான். ஒரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்க மெஷின் தேவை. அந்த மெஷின்தான் GPUs. ஆனால் அமெரிக்கா, சீனாவுக்கு தரமற்ற மெஷினைதான் கொடுத்திருக்கிறது. எனவே சீனா, தரமற்ற மிஷன்களை அதிக அளவில் பயன்படுத்தி, அதாவது அதிக H800 GPUsகளை 2000 என்கிற அளவில் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தை தரமானதாக கொடுத்திருக்கிறது.
H100 GPUs மற்றும் A100 GPUs மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT-ஐ விட, தரம் குறைந்த H800 GPUsகளை கொண்டு உருவாக்கப்பட்ட DeepSeek, சக்கை போடு போட்டு வருகிறது. இதற்காக தனது நாட்டில் பல்கலைக்கழகங்களில் தலைசிறந்த மாணவர்களை கொண்டு ஆய்வு நடத்தி அதை வைத்து சாதித்திருக்கிறது சீனா.
ஆக, சீனா உள்ளூர் ஆளை வைத்து குறைவான பணத்தில் சிறந்த AI தொழில்நுட்பத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இப்படி திறமையானவர்கள் இல்லையா? இந்தியா மாதிரியான நாடுகளிலிருந்துதான் H-1B விசா மூலம் ஆட்களை கூட்டி வரனுமா? என அமெரிக்கர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதன் காரணமாக H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது இந்தியாவுக்குதான் சிக்கலை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications