நாங்க சப்போர்ட் பண்றோம்.. டிரம்ப் எடுத்த முடிவிற்கு எதிராக களமிறங்கிய சீனா! டிராகன் வேலையை காட்டுது
நியூயார்க்: உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதையடுத்து உலக சுகாதார மையத்திற்கு முழு ஆதரவு தருவோம் என்று சீனா கூறி உள்ளது.
உலக சுகாதார மையத்திற்கு தேவையான நிதி உதவி, பாதுகாப்பு உதவி, ஆராய்ச்சி உதவிகளை செய்வோம் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா வெளியேறி உள்ளதால் அந்த இடத்தை பிடிக்க சீனா முடிவு செய்துள்ளது.

கொரோனா காலத்தில் தவறாக நடந்து கொண்டது, கொரோனாவின் சோர்ஸை விசாரிக்காதது, சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தார். கிட்டத்தட்ட 200 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் ஒரு பகுதியாக உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. ஒரு பக்கம் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே.. இன்னொரு பக்கம் இதற்கான ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.
அதோடு உலக சுகாதார மையத்திற்கு இனிமேல் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா வருடா வருடம் 111 மில்லியன் டாலர் அளிக்கிறது. சில சமயங்களில் தாமாக முன் வந்து 400 மில்லியன் டாலர் வரை கூட அமெரிக்கா அளிக்கும். உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.
ஆனால் பிடன் ஆட்சிக்கு முன் நடைபெற்ற டிரம்ப் ஆட்சியில் உலக சுகாதார மையம் மீதான நிதியை டிரம்ப் நீக்கினார் உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது. இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.
ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது. உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள்.
சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, என்று அமெரிக்க அதிபராக முன்பு டிரம்ப் இருந்த போது தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.
இதையடுத்து உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications