உயிர்பெறும் 15000 வருட பழைய வைரஸ்.. கிளைமேட் மாற்றத்தால் சீனாவில் திடீர் திருப்பம்.. என்ன நடக்குமோ?!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க ஏற்படும் வெப்பநிலை உயர்வு காரணமாகவும், காலநிலை மாற்றம் காரணமாகவும் பல்வேறு புதிய வைரஸ் தாக்குதல், பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நமக்கு முன் அனுபவம் இல்லாத பல புதிய வைரஸ்கள் மனிதர்களுக்கு இடையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Climate Change காரணமாக ஏற்படும் பாதிப்புகள்.. பேரழிவுகளை சந்திக்கும் உலக நாடுகள்| Explained

    உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

    ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடல் மட்டம்

    கடல் மட்டம்

    அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

    ஆபத்து

    ஆபத்து

    எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும்.

    சாராம்சம்

    சாராம்சம்

    சுற்றுசூழல் மாறுபாடு ஏற்கனவே உலக நாடுகள் முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. மக்கள் இதை வரும் நாட்களில் வேகமாக உணருவார்கள் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Intergovernmental Panel on Climate Change அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விஷயங்களில் சுருக்கமான சாராம்சம் இதுதான். மக்களின் செயல்பாடுகள் காரணமாக வெப்பநிலை உயருகிறது. இதனால் பூமி மேலும் வெப்பம் அடைந்து ஐஸ் கட்டிகள், பனிப்பாறைகள் உருகி வருகிறது.

    கடல் மட்டம் அதிகரிப்பு

    கடல் மட்டம் அதிகரிப்பு

    இதனால் கடல் மட்டம் மேலும் அதிகரிக்கிறது. இது வெள்ளம், புயல் இயற்கை பேரிடர்களை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அதிக வெயில் காலம், அதிக வெப்பநிலை, காட்டுத்தீ போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இது எல்லாம் சேர்த்து பல புதிய இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தும் என்று வானிலை வல்லுநர்கள், காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்படி ஐஸ் கட்டிகள், பனிப்பாறைகள் உருகுவது வெறும் இயற்கை பேரிடர்களை மட்டும் ஏற்படுத்தாது.. கொரோனாவை விட கொடிய பல பெருந்தொற்றுகளையும் கூட இது ஏற்படுத்துமாம்.

    வைரஸ்கள்

    வைரஸ்கள்

    ஆம், நமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத, மருத்துவர்கள் இதற்கு முன் கேள்வி கூட படாத வைரஸ்கள் இதன் மூலம் தோன்றும் அபாயம் உள்ளதாக வைரலாஜி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸ்கள். சீனாவின் மேற்கு பகுதியில் திபெத் அருகே கடந்த 2015ல் குலலியா ஐஸ் கேப் என்ற பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உருகும் நிலையில் இருந்த பல்வேறு பனிப்பாறைகள் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சீன வைரஸ்

    சீன வைரஸ்

    காலநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வைரலாஜி ஆய்வாளர்கள் அடங்கிய குழு இந்த சோதனையை ஆராய்ச்சியை மேற்கொண்டது. 6 வருடங்களுக்கு முன் 22 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இந்த ஐஸ் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் நடத்திய சோதனையில் மொத்தம் 33 விதமான வைரஸ்கள் இந்த பாறைகளில் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த வைரஸ்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வைரஸ்கள் எல்லாம் சாகாமல் அப்படியே உயிரோடு இருந்திருக்கிறது.

    புதிய வைரஸ்

    புதிய வைரஸ்

    இந்த வைரஸ்களின் காலம் 15 ஆயிரத்திற்கு முந்தையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த வைரஸ்களில் 28 வைரஸ்களை வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன் பார்த்ததோ, கேள்வி பட்டதோ கிடையாது. இவ்வளவு காலம் ஐஸ் பாறைகளுக்கு உள்ளேயே இருந்ததால் இந்த வைரஸ்கள் குறித்து இவர்கள் கேள்வி பட்டதே இல்லை. இதெல்லாம் முழுக்க முழுக்க மனிதர்களுக்கு புதிய வகை வைரஸ்கள் ஆகும்.

    காலநிலை மாற்றம்

    காலநிலை மாற்றம்

    அதோடு இந்த வைரஸ்களும் விலங்குகள், மனிதர்களிடம் இருந்து வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை. தாவரங்கள், பூமியில் இருக்கும் வேறு பொருட்களில் இருந்து இந்த வைரஸ்கள் உருவாகி இருக்கலாம். இதனால் இதன் பண்புகள் யாருக்கும் தெரியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற பனிப்பாறைகள் உருகி அதன் உள்ளே புதைந்து உயிரோடு காத்திருக்கும் வைரஸ்கள் வெளியே வரும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    காலநிலை மாற்றம்

    காலநிலை மாற்றம்

    அதாவது உள்ளே இத்தனை வருடமாக புதைந்து மனித குலத்தை தாக்காமல் இருக்கும் இது போன்ற வைரஸ்கள் காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. 15 ஆயிரம் வருடங்களாக உறங்கிக்கொண்டு இருக்கும் வைரஸ்கள் வெளியேறும் ஆபத்துகள் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெப்பநிலை உயர்வால் புதிய வகை உருமாறிய வைரஸ்கள் உருவாக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

     ஐஸ் கட்டிகளுக்குள் வைரஸ்

    ஐஸ் கட்டிகளுக்குள் வைரஸ்

    ஏற்கனவே வெப்பநிலை உயர்வு நோய் பரவலை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது ஐஸ் கட்டிகளுக்குள் இருக்கும் புதிய வகை வைரஸ்கள் வெளியே வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் நேரடியாக ஏற்படுத்தும் பேரிடர்களுக்கு இணையான பாதிப்புகளை இதுபோன்ற மறைமுக பேரிடர்களும் ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+