அப்படியே அடியோடு மாறிய காசா.. டிரம்ப் பகிர்ந்த AI வீடியோவால் புது சர்ச்சை!
நியூயார்க்: காசாவை அமெரிக்கா வாங்கிக்கொள்ளும் என்று டிரம்ப் பேசி வருகிறார். இந்நிலையில், காசா குறித்த AI வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் அவர் ஷேர் செய்திருக்கிறா். இது புது பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.
காசாவை அமெரிக்கா வாங்கிக்கொள்கிறது எனில், காசா மக்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்குமா? என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், அவர்கள் காசா மக்களாவே தொடர்வார்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த போரில் காசா பகுதிதான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பகுதியை அமெரிக்கா வாங்கிக்கொள்ளும் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசாவை மட்டுமல்ல, கனடாவை கூட வாங்கிக்கொள்வதாக கூறியிருந்தார். அது எப்படிங்க? ஒரு நாட்டின் பகுதியை காசு கொடுத்து வாங்க முடியும்? என அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படி இருக்கையில், காசா தொடர்பாக AI வீடியோ ஒன்றை டிரம்ப் பகிர்ந்திருக்கிறார். அதில் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் காசாவை பணக்கார நகரமாக மாற்றியிருக்கிறார்கள். மிக முக்கியமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்புடன் அமர்ந்திருக்கிறார். டிரம்ப்-மஸ்க்-நெதன்யாகு கூட்டணி காசாவை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். இந்த வீடியோவுக்கு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், மத்திய கிழக்கிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

காசா என்பது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி. இது போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நிலைமைக்கு இந்நகரம் திரும்பவர குறைந்தது 5-10 ஆண்டுகள் வரை ஆகும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காகவெல்லாம்.. காசாவை தூக்கி அமெரிக்காவுக்கு கொடுத்துவிட முடியாது என பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறுகின்றனர். காசா மீதும், பாலஸ்தீன மக்கள் நலன் மீதும் அக்கறை இருக்கிறது எனில், காசாவை கட்டமைக்க தேவையான நிதியை கொடுக்கலாம்.

மட்டுமல்லாது இஸ்ரேல் இனி, பாலஸ்தீன விவகாரத்திற்குள் நுழையாத வகையில் நெதன்யாகுவிடம் பேசலாம். அப்படியும் இல்லையெனில், காசாவின் பொருளாதார வளர்ச்சிக்கு லாப நோக்கமற்று முதலீடு செய்யலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, காசாவை வாங்கி இங்குள்ள மக்களை பக்கத்து நாடுகளுக்கு விரட்டிவிட்டு, பணக்காரர்களின் BAR-ஆக இதை மாற்ற நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வீடியோவில் காசா மக்களின் நலன்கள் எதுவும் பிரதிபலிக்கப்படவில்லை.

மாறாக மதுவும், மாதுவும், கேளிக்கை விடுதிகளும், நீச்சல் குளங்களும்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதார வளர்ச்சி குறித்து இந்த வீடியோவில் எந்த காட்சியும் இல்லை. இதிலிருந்தே காசாவை டிரம்ப் எப்படி மாற்ற யோசித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது என பாலஸ்தீன ஆதரவாளர்கள் விமர்சித்துள்னர்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications