வெறும் 6 மாதம்தான்.. 35 லட்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை.. விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா வைரஸ்!

உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது.

Recommended Video

    Brooklyn Funeral Home's License Suspends

    கடந்த 6 மாதங்களுக்கு முன் சீனாவில் முதல் நபர் வுஹன் பகுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். அப்போது தொடங்கி பிரச்சனை உலகம் மொத்தத்தையும் தற்போது ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது.

    வெறும் 6 மாதத்தில் தற்போது உலகம் முழுக்க கொரோனாவால் 3,565,265 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 248,250 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக இதுவரை 1,153,995 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    தினமும் அதிகம்

    தினமும் அதிகம்

    அமெரிக்காவில் மட்டும் அதிகமாக 1188122 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 68598 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் 323,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24648 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் அதிகமாக 247,122 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 25264 பேர் பலியாகி உள்ளனர்.

    இத்தாலி எப்படி

    இத்தாலி எப்படி

    இத்தாலியில் அதிகமாக 210,717 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 28884 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் இரண்டு நாடுகளிலும் கொரோனா வேகம் வெகுவாக குறைய தொடங்கி உள்ளது . அங்கு பலி அடையும் வேகம் குறைய தொடங்கி உள்ளது. யுனைட்டட் கிங்கிடமில் 186,599 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 28466 பேர் பலியாகி உள்ளனர்.

    பிரான்ஸ் நிலை

    பிரான்ஸ் நிலை

    பிரான்சில் 168,693 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 24895 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் 165,664 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 6866 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 134,687 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 1890 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் திடீர் என்று கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

    ரஷ்யாவின் மோசமான நிலை

    ரஷ்யாவின் மோசமான நிலை

    ரஷ்யாவில் இரண்டு நாட்களாக தினமும் 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். துருக்கியில் 126,045 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 3394 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 101,147 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 7950 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 97,424 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 6023 பேர் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+