சிக்னல் கொடுத்துவிட்டார்.. சீனா பின்விளைவுகளை சந்திக்காது என்று யார் சொன்னது? டிரம்ப் பெரிய திட்டம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கொரோனா குறித்த உண்மைகளை மறைத்ததற்காக சீனா பின்விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மறைமுகமாக கூறியுள்ளார்.

Recommended Video

    ஒபாமாவின் தவறு தான் கொரோனா வைரஸ் பரவ காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

    கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா தொடக்கத்தில் கூறி வந்தது. முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று தொடர்ச்சியாக அழைத்து வந்தார். சீனாதான் இதை பரப்பியது என்று தான் சென்ற மேடைகளில் எல்லாம் கூறினார்.

    தற்போது கொரோனா பாதிப்பில் உலகின் எபிசென்டராக அமெரிக்கா மாறியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 614,246 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 26064 பேர் பலியாகி உள்ளனர்.

    சீனா தவறு

    சீனா தவறு

    அதேபோல் அமெரிக்காவில் நியூயார்க்கில் மட்டும் 203,123 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10084 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சீனா கொரோனா குறித்த தகவல்களை மறைத்துவிட்டது. தொடக்க காலத்தில் கொரோனா குறித்த உண்மைகளை சீனா மறைத்துவிட்டது. சீனா நினைத்து இருந்தால் உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவாமல் தடுத்து இருக்க முடியும் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

    அந்த ஒரு கேள்வி

    அந்த ஒரு கேள்வி

    இந்த நிலையில் டிரம்ப் தற்போது அளித்துள்ள பேட்டியில் சீனா குறித்து பேசினார். அவரிடம், கொரோனா குறித்த உண்மைகளை மறைத்ததற்காக சீனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீனா இதற்கான பின்விளைவுகளை சந்திக்காதா என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். இதை கேட்டதும் கோபம் அடைந்த டிரம்ப், சீனா பின்விளைவுகளை சந்திக்காது என்று உங்களுக்கு யார் சொன்னது.

    சீனா பின்விளைவு

    சீனா பின்விளைவு

    இதை எல்லாம் சொல்லிவிட்டு செய்ய மாட்டார்கள். சீனா பின்விளைவுகளை சந்திக்காது என்று உங்களுக்கு எப்படி தெரியும். சீனாவிற்கு போக போக தெரியும். நான் சில விஷயங்களை சொல்ல மாட்டேன். சீனா போக போக இதை தெரிந்து கொள்ளும். நீங்களும் இதை போக போக தெரிந்து கொள்வீர்கள், என்று டிரம்ப் மிகவும் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

    டிரம்ப் கோபம்

    டிரம்ப் கோபம்

    இதனால் டிரம்ப் சீனாவிற்கு எதிராக எதோ பெரிய திட்டம் வைத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதற்கான சிக்னல்தான் அவரின் இன்றைய பேச்சு என்று கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு நீங்கிய பின், அமெரிக்கா சொந்த காலில் நிற்க தொடங்கும். அப்போது கண்டிப்பாக சீனா மோசமான பின்விளைவுகளை சந்திக்கும். அமெரிக்கா அதிபர் அதற்கான அறிகுறியைத்தான் தற்போது பேட்டியாக வெளிப்படுத்தி உள்ளார் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+