40 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. மிக மோசமான நிலையில் அமெரிக்கா.. என்ன நடக்கிறது?
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 40,000ஐ தாண்டியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 40,000ஐ தாண்டியுள்ளது. அங்கு மொத்தம் கொரோனாவால் 40,109 பேர் பலியாகி உள்ளனர்.
உலகத்திலேயே கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு தினமும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகளை விட மிக மோசமாக அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் 755162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 16370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1095 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் 40,109 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 68,822 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 646,231 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 13,551 மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள்.

மோசமான உடல்நிலை
இவர்கள் மிக மோசமான உடல்நிலையுடன் ஐசியூவில் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க்தான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க்கில் 247,215 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க் எப்படி
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக நியூயார்க்கில் 18,298 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து நியூஜெர்சியில் 85,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4202 பேர் மொத்தமாக அங்கு பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் நியூஜெர்சியில் 3,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு மாஸசுசெட்ஸ் பகுதியில் மொத்தம் 36,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாகாணங்கள் நிலை
மாஸசுசெட்ஸ் பகுதியில் மொத்தம் 1560 பேர் பலியாகி உள்ளனர். பென்சில்வேனியாவில் 32,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1237 பேர் அங்கு பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் 30,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1418 பேர் அங்கு இந்த கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா மிக மோசமாக தோல்வி அடைந்துள்ளது.

அமெரிக்கா திணறுகிறது
அங்கு நியூயார்க்கில் கொஞ்சம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற சில மாகாணங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து அமெரிக்கா மீண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications