இது வெறும் வைரஸ் இல்லை.. நம்மை தாக்கிவிட்டனர்.. கொரோனா பற்றி டிரம்ப் கொந்தளிப்பு.. என்ன சொல்கிறார்?
நாம் தாக்கப்பட்டு உள்ளோம், இது வெறும் வைரஸோ, ஃப்ளூவோ இல்லை, இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நாம் பார்த்தது இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க்; நாம் தாக்கப்பட்டு உள்ளோம். இது வெறும் வைரஸோ, ஃப்ளூவோ இல்லை. இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நாம் பார்த்தது இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க 2,637,911 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 184235 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா உருவாகி 4 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
அமெரிக்காதான் கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அமெரிக்காவில் கொரோனா காரணமாக 849,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 47681 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 20354 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 262,268 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டிரம்ப் பேட்டி
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்காவை தாக்கிவிட்டார்கள். ஆம் நாம் தாக்கப்பட்டு உள்ளோம். இது வெறும் வைரஸோ, ஃப்ளூவோ இல்லை. இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நாம் பார்த்தது இல்லை. 1917ல் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் தற்போது நடக்கும் விஷயம் அதை விட மோசமானது. தற்போது நிலை வேறு மாதிரியானது .

நமக்கு வேறு வழியில்லை
நமக்கு வேறு வழியில்லை. நமக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை. நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். நாம் இதை சரி செய்ய வேண்டும். உலகிலேயே பொருளாதார ரீதியாக நாம்தான் சிறந்த நாடு. சீனாவைவிட நாம்தான் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் திகழ்ந்து வருகிறோம். நாம் கடந்த மூன்று வருடமாக கஷ்டப்பட்டு முன்னேறினோம்.

அனைத்தையும் மூடினார்கள்
திடீர் என்று ஒருநாள் அனைத்தையும் மூடுங்கள் என்று எங்களுக்கு உத்தரவு வந்தது. அனைத்து விதமான பணிகளையும் மூட வேண்டிய நிலை வந்தது. ஆனால் நாம் இதை மீண்டும் திறப்போம். மூடப்பட்ட அனைத்தையும் நாங்கள் மீண்டும் திறப்போம். என்ன கொஞ்சம் பணம் கூடுதலாக செலவாகும். ஆனால் நாம் மீண்டு வருவோம்.

விரைவில் திறப்போம்
நாம் மீண்டு வரும் போது மிகவும் வலிமையாக மீண்டு வருவோம். நாம் பல நிறுவனங்களை இந்த சரிவில் இருந்து காப்பாற்றி இருக்கிறோம். இன்னும் நிறைய நிறுவனங்களை நாம் காப்பாற்ற போகிறோம். கடந்த வருடம் மிக சிறப்பாக இருந்தது. இந்த வருடம் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது. ஆனால் அமெரிக்காவில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.

மொத்தமாக ஒரு நாள் மீள்வோம்
அமெரிக்காவில் இருக்கும் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். முக்கியமான இடங்களில் கிராப் சரிய தொடங்கி உள்ளது. டெட்ராய்டில் மட்டும் கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. விரைவில் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் திறக்கும், என்று டிரம்ப் கூறியுள்ளார்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications