கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா.. 6 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 28653 பேர் பலி!

உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நியுயார்க்: உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,20,938 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Recommended Video

    கொரோனா பூமியான அமெரிக்கா..தற்போது இப்படித்தான் இருக்கிறது

    கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில்தான் தோன்றியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த வைரஸ் முதலில் சீனா முழுக்க பரவியது. அதன்பின் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வைரஸ் பரவியது.

    தற்போது உலகம் முழுக்க 150 நாடுகளுக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளது.

    உலகம் முழுக்க எப்படி

    உலகம் முழுக்க எப்படி

    இந்த நிலையில் 6,20,938 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 28,653 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 137,363 கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துளளனர். இன்று இரவு பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா நிலை

    அமெரிக்கா : 105,019 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,717 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தாலி: 86,498 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 9134 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி இதில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

    சீனா: 81,394 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3295 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    ஸ்பெயின்: 72,248 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5690 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது.

    ஜெர்மனி நிலை

    ஜெர்மனி நிலை

    ஜெர்மனி: 53,340 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 399 பேர் பலியாகி உள்ளனர்

    ஈரான்: 35,408 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2517 பேர் பலியாகி உள்ளனர்

    பிரான்ஸ்: 32,964 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2995 பேர் பலியாகி உள்ளனர்

    யுனைட்டட் கிங்டம்: 17,089 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1019 பேர் பலியாகி உள்ளனர்

    சுவிஸ்: 13,377 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 242 பேர் பலியாகி உள்ளனர்

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்தியாவில் 21 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். நாடு முழுக்க 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளை இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்கிறார்கள். 84 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளானார். 840 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகமாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+