ஓமிக்ரான் தீவிரமாக பரவுகிறது.. இதே நிலை நீடித்தால் இன்னும் 2-3 வாரத்தில்.... ஆண்டனி விடுத்த வார்னிங்
நியூயார்க்: உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாக பரவுவதாக அமெரிக்க அதிபருக்கான தலைமை மருத்துவ ஆலோசகரும் கொரோனா நிபுணருமான ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகமாக பதிவாகிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் தினசரி கேஸ்களில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமான கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும். அமெரிக்காவில் முக்கியமாக நியூயார்க்கில் தினசரி கொரோனா கேஸ்கள் 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதான் நியூயார்க்கில் இந்த வருடம் பதிவான மிக அதிக ஒரு நாள் கேஸ் ஆகும்.
அங்கு புதிதாக 88,682 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 51,698,963 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 827,214 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

ஆண்டனி பவுச்சி
இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கான தலைமை மருத்துவ ஆலோசகரும் கொரோனா நிபுணருமான ஆண்டனி பவுச்சி அளித்த பேட்டியில் உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாக பரவுவதாக குறிப்பிட்டுள்ளது. அவர் அளித்த பேட்டியில், ஓமிக்ரான் கேஸ்கள் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் காட்டுத் தீ போல பரவுகிறது.

ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரானுக்கு மிக வேகமாக பரவும் திறன் இருக்கிறது. இப்போது எதிர்பார்க்காத அளவில் புதிய கேஸ்கள் பதிவாகிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க லாக்டவுன் வருமா என்று சொல்ல முடியாது. அதை பற்றி என்னால் விளக்க முடியாது. ஆனால் மருத்துவமனைகள் மோசமான நிலையை அடைய வாய்ப்பு உள்ளது.

அமெரிக்கா ஓமிக்ரான்
மீண்டும் மருத்துவமனைகளில் கேஸ்கள் அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மருத்துவமனைகள் நிரம்பும் முன் அதை தயார் செய்ய வேண்டும். டெல்டா அளவிற்கு ஓமிக்ரான் வலுவானது இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்களா தெரியாது. ஓமிக்ரான் காரணமாக நிறைய கேஸ்கள் வருகிறது. அதுவே பெரிய சிக்கல்தான்.

பெரிய சிக்கல்
நிறைய கேஸ்கள் வரும் போது அதனால் மருத்துவமனைகள் நிரம்பும். சரியான சிகிச்சை கிடைக்காத பட்சத்தில் அது பலி எண்ணிக்கையை அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால் இன்னும் 2-3 வாரத்தில் மிக கடுமையான சூழ்நிலை உருவாகும். வேக்சின் ஒருவகையில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும்.
Recommended Video

வேக்சின்
நீங்கள் வேக்சின் போடவில்லை என்றால் இப்போதே சென்று போட்டுக்கொள்ளுங்கள். ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்த குளிர்காலம் கொஞ்சம் கடுமையான குளிர்காலமாக இருக்க போகிறது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் மாதங்கள் மிக கடுமையாக இருக்கிறது என்று ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications