ஓமிக்ரான் பரவல்.. உலகம் முழுக்க வேகம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் கேஸ்கள் அதிகரிப்பு.. அச்சம்!
நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 525,554 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 275,724,013 பேர் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
5,376,000 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,796 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகம் முழுக்க ஓமிக்ரான் 90 நாடுகளில் பரவி வருகிறது. அதில் 20 நாடுகளில் தற்போது அதிக அளவில் பரவும் கொரோனாவாக ஓமிக்ரான் உள்ளது.
முக்கியமாக அமெரிக்காவில் தற்போது ஓமிக்ரான்தான் டாமினன்ட் வேரியன்ட். ஆம் அமெரிக்காவில் தற்போது பதிவாகும் புதிய கேஸ்களில் 73 சதவிகிதம் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும்.

அமெரிக்கா
ஓமிக்ரான் பரவலால் அமெரிக்காவில் தினசரி கொரோனா கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 126,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 52,011,887 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 828,439 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,662,099 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,521,349 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்து 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரிட்டனில் 11,453,121 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 91,743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,261 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,826,541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,479,319 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ரஷ்யா
ரஷ்யாவில் 10,241,812 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 27005 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 298,222 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1019 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9,014,980 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 928,610 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரான்ஸ்
பிரான்சில் 8,640,924 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 48,473 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 121,717 பேர் கொரோனா 7,554,011 பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,498,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 965,243 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

இந்தியா
இந்தியாவில் இதுவரை 174 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை 34,747,913 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 477,554 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,178,940 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 90,344 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications