நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் அமெரிக்கா நினைத்தது நடந்தே விட்டது.. கொரோனாவால் ஏற்பட்ட டிவிஸ்ட்.. பணிந்தது சீன அரசு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவினால் அதை ஏற்றுக்கொள்வோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவினால் அதை ஏற்றுக்கொள்வோம் என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா இப்படி ஒரு சூழ்நிலைக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின் வேறு ஒரு வகைதான் சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது.

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது. ஆம் அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு சேர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் கடந்த டிசம்பரில் சீனா சென்று வந்தவர்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதன்பின் அமெரிக்காவில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி

உதவி

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏற்கவில்லை

ஆனால் ஏற்கவில்லை

ஆனால் முதலில் இதை சீன அரசு ஏற்காமல் இருந்தது. எங்களுக்கு இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரியும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இன்னும் சில நாட்களில் இந்த பாதிப்பில் இருந்து வெளியே வருவோம். வைரஸ் தாக்குதலை சமாளிப்போம். அமெரிக்காவின் உதவி இப்போது தேவை இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் திடீர் திருப்பமாக, சீனா இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு இருக்கிறது. எங்களால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை. வைரசுக்கு எதிராக செய்ய வேண்டியதை எல்லாம் செய்து பார்த்துவிட்டோம். ஆனால் எங்களால் இதை கட்டுபடுத்த முடியவில்லை. சீனா இதில் பின்தங்கிவிட்டது. இதற்கு எதிராக நாங்கள் புதிய பாடம் கற்று இருக்கிறோம், என்று சீனா தெரிவித்துள்ளது.

உதவி கேட்டது

உதவி கேட்டது

அதே சமயம் தற்போது சீனா அமெரிக்காவிடம் உதவியும் கேட்டுள்ளது. ஆம், இது குறித்து சீனா வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்தில், சீனாவில் பரவும் வைரஸ் பற்றி அமெரிக்கா சில தவறான செய்திகளை பரப்புகிறது. மக்களை பீதியில் ஆட்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை அமெரிக்கா பரப்புகிறது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்வதாக கூறியது. அமெரிக்காவின் உதவியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அமெரிக்கா எங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும், என்று சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்காவின் உதவி இன்றி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலைக்கு சீனா வந்துள்ளது. அமெரிக்கா இப்படி ஒரு வாய்ப்பிற்காகத்தான் காத்து இருந்தது என்று கூற வேண்டும். அமெரிக்கா இந்த உதவியை செய்யும் முன் கண்டிப்பாக சீனாவிற்கு ஏதாவது செக் வைக்கும். இரண்டு நாட்டிற்கும் இடையில் வர்த்தக போர் நடந்து வரும் நிலையில், இந்த கொரோனாவை வைத்து, சீனாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

English summary
Coronavirus: The Chinese government accepts to get help from the USA finally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X