இன்னும் ஒரு வாரம்தான்.. 1 கோடியை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை.. உலகம் முழுக்க படு வேகத்தில் கொரோனா!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 9,342,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான புதிய கேஸ்கள் உலகம் முழுக்க பரவி வருகிறது. இன்னும் 4 நாட்களில் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 1 கோடியாக உயர போகிறது.
நேற்று மட்டும் மொத்தம் 159,935 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டது. இதுவரை கொரோனா காரணமாக 478,903 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுக்க 5,036,330 பேர் குணமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இதுவரை 2,424,054 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகம் எங்கே
உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 123,472 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் மொத்தமாக 35 ஆயிரம் பேர் ஒரே நாளில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட வேகம் குறையவில்லை.

பிரேசில் நிலைமை
பிரேசிலில் கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. பிரேசிலில் மொத்தம் 1,151,479 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டடுள்ளது. அங்கு ஒரே நாளில 42 ஆயிரம் பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா காரணமாக 52,771 பேர் பலியாகி உள்ளனர். பிரேசில் விரைவில் அமெரிக்காவை கூட முந்த வாய்ப்புள்ளது.

ரஷ்யா எப்படி
ரஷ்யாவில் மொத்தம் 599,705 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாம் இடம் வகிக்கிறது. அங்கு புதிய கேஸ்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் மொத்தம் 14483 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியா இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

இந்தியா நிலைமை
ஆனால் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக வளர்கிறது. இதனால் விரைவில் இந்தியா இந்த பட்டியலில் மூன்றாம் இடம் வரும் என்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் கொரோனா காரணமாக 456,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 15,612 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 468 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 14,483 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications