ஒரே நாளில் உலகம் முழுக்க 194,008 பேருக்கு கொரோனா.. அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிப்பு.. முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க 27,477,062 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்த பாதிப்பு விரைவில் 3 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வுஹன் நகரத்தில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது.அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க வேகமாக பரவியது. சீனாவின் வுஹன் நகரத்தை முடக்கிய கொரோனா ஒரே மாதத்தில் உலகின் பிற நாடுகளுக்கு சென்றது.

இந்த நிலையில் 10 மாதங்களில் உலகம் முழுக்க 200க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி உள்ளது. இதுவரை உலகம் முழுக்க 896,397 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

விவரம்

விவரம்

உலகம் முழுக்க 19,570,737 பேர் கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 194,008 பேர் உலகம் முழுக்க பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 75002 பேர் 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகம் முழுக்க 24 மணி நேரத்தில் 3,684 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க நிலை

அமெரிக்க நிலை

கொரோனா பாதிப்பு லிஸ்டில் இப்போதும் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 6,485,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25317 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மொத்தமாக 193,534 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 286 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர்.

இந்தியா நிலை

இந்தியா நிலை

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 75022 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உலக அளவில் இந்தியாவில்தான் தினமும் அதிக கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 4277584 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 882751 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 3321420 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 74123 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் விரைவில் 43 லட்சம் கொரோனா கேஸ்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் நிலை

பிரேசில் நிலை

பிரேசில் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் மொத்தமாக 4,147,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,188 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் மொத்தமாக 127,001 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர்.

ரஷ்யா நிலைமை

ரஷ்யா நிலைமை

ரஷ்யாவில் மொத்தமாக 1,030,690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.5,185 பேர் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அங்கு விரைவில் கொரோனா வேக்சின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ரஷ்யாவில் மொத்தமாக 17,871 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் ரஷ்யாவில் பலியாகி உள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+