மருந்தை கொடுங்க... இல்லையெனில் தக்க பதிலடி தருவோம்.. இந்தியாவிற்கு டிரம்ப் நெருக்கடி.. பரபரப்பு!
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் முக்கியமான பங்கு வகிக்க தொடங்கி உள்ளது. கொரோனாவை இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் ஓரளவு கட்டுப்படுத்துகிறது.
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும். இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து இந்தியாவிடம் அதிகம் உள்ளது. அமெரிக்கா இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பும்படி இந்தியாவிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

என்ன பேட்டி
அதிபர் டிரம்ப் இது தொடர்பாக நேற்று பேட்டி அளித்தார். அதில், கொரோனா குறித்து நான் நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன், இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது. அதனால் அவர்கள் அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும்.

டிரம்ப் விடுத்த கோரிக்கை
அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்ய கூறியுள்ளோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன். இந்தியா எங்களுக்கு ஏற்றுமதி செய்யும் என்று நம்புகிறேன் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார் .

ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை
ஆனால் இந்த மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருக்கிறது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இந்திய மருத்துவ கழகம் சார்பாக கொரோனாவிற்கு எதிராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஓரளவு உதவுவதால் இந்தியா இதன் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அரசியல்
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அதில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துக்கு இந்தியா தடை விதித்தது தெரியும். அது மற்ற நாடுகளுக்கு மட்டும்தான். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கும் அதே தடையை விதிப்பார் என்று சொல்ல முடியாது. மோடி அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் தடை வேண்டாம்
அமெரிக்காவிற்கு மட்டும் இந்தியா இந்த தடையை நீக்க வாய்ப்புள்ளது. நான் ஞாயிற்றுக்கிழமைதான் மோடியிடம் பேசினேன். அவர் மிக சிறப்பாக பேசினார். இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து அவரிடம் நான் பேசி உள்ளேன். தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கிறதா என்று பார்க்கலாம். இனி வரும் நாட்களில் இந்தியாவின் நிலைப்பாடு தெரியும்.

எச்சரிக்கை
நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை பேணி வருகிறோம். இந்தியா அமெரிக்காவை மதிக்கிறது. எங்களுடன் இந்தியா செய்துள்ள பொருளாதார ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும்.ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தால் ஓகே. இல்லையென்றாலும் ஓகேதான். ஆனால் கண்டிப்பாக இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும். கண்டிப்பாக கொடுக்கப்படும், என்று கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications