கொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலக அளவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,500,298 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு வேகம் அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடங்கி 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் அதன் தீவிரம் குறையவில்லை.

ஒரு பக்கம் கொரோனா தடுப்பு மருந்துக்கான ரேஸ் தீவிரமாகி வருகிறது. ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை பதிவு செய்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.

எத்தனை

எத்தனை

உலக அளவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,500,298 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 254,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகம் முழுக்க 744,366 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜ் எத்தனை

டிஸ்சார்ஜ் எத்தனை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,064 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் 13,422,539 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். தற்போது உலகம் முழுக்க ஆக்டிவ் கேஸ்களாக 6,333,393 பேர் உள்ளனர். மிக மோசமான உடல்நிலையில் 64,424 பேர் உள்ளனர்.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

அமெரிக்காவில் மட்டும் 5,303,977 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 167,562 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 3112393 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 103099 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 897577 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 15131 பேர் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    முதல் coronavirus vaccine-ஐ அறிமுகப்படுத்தியது Russia | oneindia
    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 2328405 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 644,116 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,638,101 பேர் குணமடைந்து உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+