மீண்டு வந்த சீனா.. முடங்கியது அமெரிக்கா.. உலகம் முழுக்க 12,72,737 பேருக்கு கொரோனா.. 69,418 பேர் பலி!
கொரோனா பரவலில் இருந்து சீனா மிகப்பெரிய அளவில் மீண்டு வந்துள்ளது.
நியூயார்க்: கொரோனா பரவலில் இருந்து சீனா மிகப்பெரிய அளவில் மீண்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதனால் மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கிறது.
Recommended Video
கொரோனா காரணமாக உலகம் முழுக்க பாதிப்படையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 12,72,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 69,418 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 5400 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா நிலை
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 336,550 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அமெரிக்காவில் 9610 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 25000 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1480 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க வரலாற்றில் நேற்றைய நாள் மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்பெயினில் நிலை என்ன
ஸ்பெயினில் 131,646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 12641 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது.விரைவில் பலி எண்ணிக்கையில் ஸ்பெயின் இத்தாலியை முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தாலியில் 128,948 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15887 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலி எப்படி உள்ளது?
உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் 100,123 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1584 பேர் பலியாகி உள்ளனர் பிரான்சில் 92,839 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8078 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 58,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3603 பேர் பலியாகி உள்ளனர்

நிம்மதி அளிக்கும் சீனா
சீனாவில் 81,669 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் நேற்று யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. சீனாவில் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.சீனாவில் கொஞ்சம் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் மூலம் கொரோனாவில் இருந்து சீனா மொத்தமாக மீண்டு வந்தது புலனாகி உள்ளது.

இந்தியாவின் நிலை
யுனைட்டட் கிங்டமில் 47,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4934 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் 27,069 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 574பேர் பலியாகி உள்ளனர். சுவிசில் 21,100 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 715 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 4289 பேருக்கு நாடு முழுக்க கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications