1 கோடியை நெருங்குகிறது.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. உலகம் முழுக்க 9,898,083 பேர் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 9,898,083 ஆக உயர்வு. இதுவரை கொரோனா காரணமாக 496,071 பேர் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் உலகில் இருக்கும் 180+ நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

Coronavirus: World to see 1 crore cases, Total number of cases in the world is 98 lakhs

உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து இதுவரை 5,350,253 பேர் விடுபட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க தினமும் 1 லட்சம் கேஸ்கள் பதிவாகி வருகிறது. தற்போது இதன் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 193,726 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 2,552,708 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 47,093 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக கொரோனா காரணமாக 127,634 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 657பேர் பலியாகி உள்ளனர்.

அதேபோல் கொரோனா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பிரேசில் முன்னிலையில் உள்ளது. அங்கு தினமும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கேஸ்கள் வருகிறது. பிரேசிலில் 1,280,054 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 46,907 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக கொரோனா காரணமாக 56,109 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,055 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் 620794 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6800 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக கொரோனா காரணமாக 8781 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியா இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 509446 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 18276 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக கொரோனா காரணமாக 15689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 381 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+