பக்க விளைவே இல்லை.. கோவாக்சினுக்கு 77.8% கொரோனா தடுப்பாற்றல்.. தி லான்செட் இதழ் அறிவிப்பு!
நியூயார்க்: கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் 77.8 சதவிகித தடுப்பாற்றல் கொண்டு இருப்பதாக தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் கோவாக்சின் என்ற வேக்சின் உருவாக்கப்பட்டது. உலக சுகாதார மையம் இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன் அவசர அனுமதி அளித்தது.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பின், பலமுறை டேட்டாக்களை சோதனை செய்த பின் அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 8 மாத சோதனைகளுக்கு பின்தான் கோவாக்சினுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி வழங்கியது.

அனுமதி
கோவாக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவும் கோவாக்சின் போட்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கியது. அதேபோல் யு.கே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கோவாக்சின் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கியது. பல உலக நாடுகள் இதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மனித சோதனைகளில் கோவக்சினுக்கு 77.8% நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும், டெல்டாவிற்கு எதிராக 65.2% எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும் இந்திய சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படி
இந்த நிலையில்தான் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் 77.8 சதவிகித தடுப்பாற்றல் கொண்டு இருப்பதாக தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வும் தெரிவித்துள்ளது. மொத்தம் 130 பேரிடம் செய்யப்பட்ட சோதனையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 24 பேருக்கு கோவாக்சின் வேக்சினும், 106 பேருக்கு சத்து மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவாக்சின் 77.8 சதவிகித தடுப்பாற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

விளைவு
கொரோனா கோவாக்சின் டோஸ் போடப்பட்டு இரண்டு வாரம் கழித்து இது எதிர்ப்பு ஆற்றலை வழங்கியதாகவும் உடலில் ஆண்டிபாடி உருவானதாகவும் தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது. இதே ஆய்வு கட்டுரையில் கோவாக்சின் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட சோதனை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 18-97 வயது கொண்டவர்களில் 24419 பேரிடம் இந்த கோவாக்சின் 2020 நவம்பர் முதல் 2021 மே வரை சோதனை செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

இல்லை
அதில் யாரிடமும் பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. அதேபோல் கோவாக்சின் போட்டவர்கள் பக்க விளைவு காரணமாக மரணிக்கவில்லை என்றும் தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது. அறிகுறி இல்லாத கொரோனா கேஸ்களுக்கு எதிராக இது 63.6 சதவீத எதிர்ப்பு ஆற்றல் கொண்டு உள்ளதாகவும், மற்ற அனைத்து வகை உருமாறிய கொரோனாவிற்கும் எதிராக கோவாக்சின் சராசரியாக 70.8 சதவீத எதிர்ப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாகவும் தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications