அமெரிக்கா பெரிதும் நம்பிய மாடர்னா கொரோனா வேக்சின்.. 94.5% தடுப்பாற்றால் கொண்டது.. ரிசல்ட் வெளியானது
நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 94.5 சதவிகிதம் தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அரசின் நேரடி உதவியுடன் மாடர்னா நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த வேக்சின் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது . இந்த குறிப்பிட்ட வேக்சின் மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட சோதனைகளை முடித்து இருக்கும் மாடர்னா நிறுவனம் இதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

எத்தனை பேர்
மூன்றாம் கட்ட மனித சோதனைக்கு 30000 பேரை மாடர்னா நிறுவனம் உட்படுத்தியது. இந்த 30 ஆயிரம் பேரில் 15000 பேருக்கு 100 மைக்ரோ கிராம் டோஸ் கொடுக்கப்பட்டது. இரண்டு முறையும் இதே அளவு டோஸ் கொடுக்கப்பட்டது. மற்ற 15000 பேருக்கு வெறும் தடுப்பு மருந்து இல்லாத சாதாரண ஊட்டச்சத்து ஊசியை போட்டு உள்ளனர்.

செயல்பட்டதா
இவர்கள் எல்லோரையும் தொடர்பு படுத்தி, இந்த மாடர்னா தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்று கண்டுபிடித்து உள்ளனர். அதாவது உண்மையான ஊசி போட்டவர்கள், பொய்யான ஊசி போட்டவர்கள் இருவரையும் தொடர்பு ப்டுத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் இந்த மருந்தின் நோய் தடுப்பாற்றல் 94.5% என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படி
கடந்த இரண்டு வாரங்களில் இந்த 30 ஆயிரம் பேரில் கொரோனா வந்ததில் 5.5 % பேர் மட்டுமே உண்மையான தடுப்பு மருந்து பெற்றவர்கள். பொய்யான தடுப்பு மருந்து பெற்றவர்களுக்குதான் இந்த சோதனையில் அதிகம் கொரோனா வந்துள்ளது. இதன் மூலம் இந்த மாடர்னா தடுப்பு மருந்து 94.5% பயன் அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்தில் பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லை. பொதுவாக தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் லேசான காய்ச்சல் , ஊசி போட்ட இடத்தில் வலி ஆகியவை மட்டுமே ஏற்பட்டுள்ளது.

நிறுவனம் என்ன
அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி (Moderna) நிறுவனத்துடன் அமெரிக்க அரசு இணைந்து இந்த தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. மாடர்னா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த வேக்சினுக்கு Cove என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் "Operation Warp Speed'' என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வேக்சின் இது ஆகும்.

வேகமாக
இதற்கு வேகமாக அனுமதி வாங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தில் அமெரிக்கா இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் மூன்றாம் கட்ட மனித சோதனைக்காக 472 மில்லியன் டாலரை அமெரிக்க அரசு செலவு செய்துள்ளது. மொத்தம் 500 மில்லியன் மருந்துகளை அடுத்த வருடம் மக்களுக்காக மாடர்னா உருவாக்க திட்டமிட்டுள்ளது. வருட இறுதிக்குள்

எப்படி செயல்படும்
இந்த மாடர்னா மருந்து எம்ஆர்என்ஏ முறைப்படி செயல்படும் மருந்து ஆகும். கொரோனான வைரசுக்கு எதிரான தடுப்பு தகவல்களை இந்த எம்ஆர்என்ஏதான் உடலுக்குள் கொண்டு செல்லும். கொரோனாவின் கூம்பு போன்ற புரோட்டின்களை தாக்கி அழிக்கும் வித்தையை இந்த எம்ஆர்என்ஏதான் உடலுக்குள் கொண்டு செல்லும். இதனால்தான் இந்த குறிப்பிட்ட வேக்சின் மற்ற மருந்துகளை விட கொஞ்சம் வித்தியாசமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications