Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அளவில் கொரோனாவால் 27.04 கோடி பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் இதுவரை 50,801,455 பேருக்கு பாதிப்பு

சீனா, அமெரிக்கா, பெரு நாடுகளில் தொற்று அதிகமாக பரவி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.21 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. இதில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மறுபடியும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது கவலையை தந்து வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது.. கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

இதனால் பெரும் மனித இழப்புகளும் தினம் தினம் ஏற்பட்டு வருகின்றன.. அது மேலும் தொடர்ந்து பாதிப்புகளை தந்து வருகிறது... பல்வேறு நாடுகள் படுஜாக்கிரதையாக இருந்தும், மறுபடியும் தொற்று பாதிப்பில் சிக்கி உள்ளது சில நாட்களாகவே கவலையை தந்து வருகிறது.

 சீனா

சீனா

இது உலக நாடுகளுக்கு கவலையை தந்து வருகிறது.. அதே சீனாவில் மறுபடியும் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.. அதேபோல அமெரிக்கா முதலிடத்தில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பில் உள்ளது.. பிரான்ஸ் 7வது இடத்திலும், கொலம்பியா 13-வது இடத்திலும் உள்ளது.. இங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.04 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,321,729 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மொத்த கேஸ்கள்

மொத்த கேஸ்கள்

கொரோனாவால் உலகம் முழுவதும் 270,412,730 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 243,084,407 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 22,006,594 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருந்தாலும், இப்போது மேலும் 20 ஆயிரம் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன.. மொத்த பாதிப்பு 10,819,515 ஆக அதிகரித்துள்ளது..

எண்ணிக்கை

எண்ணிக்கை

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 439 ஆக உயர்ந்து வருகிறது.. அந்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,182,669 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்கள் 34,694,142 பேர் ஆகும்.. புதிதாக நேற்று ஒரே நாளில் 3632 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதுவரை 475,434 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.. நேற்று ஒருநாள் தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.. இதுவரை 34,122,795 நபர்கள் தொற்றில் இதுவரை குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..

பாதிப்பு

பாதிப்பு

அமெரிக்காவை பொறுத்தவரை 50,801,455 பேருக்கு இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 38,784 கொரோனா கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகி உள்ளது..817,956 பேர் இதுவரை தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.. நேற்று மட்டும் 167 பேர் கொரோன வைரஸால் உயிரிழந்துள்ளனர்.. ரஷ்யாவில் 10,016,896 பேரை கொரோனா இதுவரை தாக்கி உள்ளது.. நேற்று 29,929 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன... துருக்கியில் 9,040,179 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. பிரேசிலில் 22,189,867 நபர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+