"அசிங்கம் அசிங்கம்".. மைனர் பிள்ளைகளுடன் "உறவு".. அதுவும் ஸ்கூல்ல.. சிக்கிய 6 பெண்கள்.. யார் பாருங்க
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அந்நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கடந்த 2 நாட்களில் மட்டும் 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்..?
பாலியல் கல்வியின் உண்மையான நோக்கம், உடலுறவுகளால் வரும் அவசியமற்ற, விரும்பாத கருத்தரிப்புக்களைத் தவிர்ப்பதும், தவறான விளைவுகளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் காப்பதும்தான். ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக்கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும் என்பதே உண்மை.

ஆனால், சிலசமயங்களில் வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதிலும் தன்னிடம் படிக்கும் மாணவர்களையே, இந்த குற்றங்களில் ஈடுபடுத்திவிடும் கொடுமையும் நடந்துவிடுகிறது.
உடலுறவு: இது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிகரித்தும் வருகிறது.. கடந்த 3 மாதம் முன்புகூட ஒரு சம்பவம் இதே அமெரிக்காவில் நடந்தது. மிசோரி மாகாணத்தில் நிக்சா உயர்நிலை பள்ளியில் அந்த டீச்சர் பணிபுரிகிறார்.. 26 வயதாகிறது.. அவரது பெயர் லீனா ஸ்டீவர்ட்.. தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவனுடன் உறவு வைத்திருந்தார்.. டீச்சரின் எண்ணத்தை அறிந்த அந்த மாணவன் முதலில் அதிர்ந்து போயுள்ளான்.. ஆனால், தன்னிடம் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால், பரீட்சையில் மார்க் போட மாட்டேன், ஃபெயிலாக்கிவிடுவேன் என்று மிரட்டினாராம்.
ஜாஸ்தி மார்க் : இதற்கு பிறகு, அந்த சிறுவனுடன் உறவு வைத்தபிறகு, அந்த மாதம் நடந்த தேர்வில், அதிக மதிப்பெண்களை அள்ளி வழங்கியுள்ளார் டீச்சர்.. ஆனாலும் அந்த மாணவனுக்கு உறுத்தல் அதிகமாகிவிட்டது.. கடினமாக படித்தும் கிடைக்காத மதிப்பெண், இப்படி ஒரு கேவலமான விஷயம் மூலம் கிடைப்பதை அவன் விரும்பவில்லை.. அதனால் நேரடியாகவே போலீசுக்கு போய்விட்டான்.. 16 வயதுடைய மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆசிரியை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்..!!
இப்போது இன்னொரு சம்பவம் இதே அமெரிக்காவின் கென்ட்டக்கி மாகாணத்தில் நடந்துள்ளது.. இங்கு உட்லான் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.. 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள்.. இந்த பள்ளியில் எல்லன் ஷெல் என்ற டீச்சர் வேலை பார்த்து வருகிறார்.. அவருக்கு 38 வயதாகிறது.. இவர் அடிக்கடி மாணவர்களை, ஸ்கூலில் உள்ள தனி ரூமுக்குள் அழைத்து சென்றுவிடுவாராம்.. இதை பார்த்த பலரும், டீச்சர் அந்த பிள்ளைகளுக்கு தனியாக அழைத்து சென்று பாடம் நடத்துகிறார் என்று நினைத்து கொண்டார்களாம்..

உறவு டீச்சர்கள்: ஆனால், அடுத்த சில நாட்களில், அந்த மாணவர்களே தேடி வந்து டீச்சரை அழைத்து கொண்டு அந்த ரூமுக்குள் போக துவங்கினார்களாம்.. அப்போதுதான், மற்ற ஆசிரியர்களுக்கு இது சந்தேகத்தை கிளப்பியது.. அதனால் டீச்சருக்கு தெரியாமலேயே அந்த ரூமில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க துவங்கி உள்ளனர்.. பிறகு, அவருக்கு தெரியாமலேயே அந்த ரூமில் கேமரா ஒன்றையும் மறைவாக ஒளித்து வைத்தனர்.. அந்த கேமராவில் டீச்சர் வசமாக சிக்கி கொண்டார்.. 2 மாணவர்களை அழைத்து சென்று டீச்சர், அந்த ரூமில் உடலுறவு வைத்துள்ளது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது..
2 மாணவர்களுக்குமே 16 வயதுதான் ஆகிறது.. இதை பார்த்து ஆசிரியர்கள் மிரண்டு போனார்கள்.. விஷயத்தை பள்ளி நிர்வாகத்துக்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட டீச்சர் மீது புகாரையும் தந்தனர்.. இதையடுத்து, ஆசிரியை, மாணவர்களுடன் உடலுறவு வைத்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம்.. இறுதியில், பலாத்காரம் செய்ததாக டீச்சர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இப்போது ட்விஸ்ட் என்னவென்றால், அமெரிக்காவின் பல பள்ளிகளில் இதுமாதிரியான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
வழிகாட்டி: அங்குள்ள ஸ்கூல்களில் டீச்சர்கள் இப்படித்தான் மாணவர்களை தனியாக அழைத்து சென்று உடலுறவு கொண்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது.. அதாவது, இந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 6 டீச்சர்கள் இதே குற்றச்சாட்டின் கீழ் கைதாகி உள்ளனர்.. இவர்கள் எல்லாருமே தங்களிடம் படிக்கும் மாணவர்களைதான் நாசம் செய்துள்ளனர்.. அதுவும் பள்ளியிலேயே இப்படியான அக்கிரமத்தை செய்துள்ளார்.. 6 டீச்சர்களுக்குமே 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான்.. கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியைகளே இப்படி நடந்து கொண்டால், பிள்ளைகளுக்கு யார்தான் வழிகாட்டுவது?
-
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications