சாப்பிட்டது ரூ.2700.. டிப்ஸ் ரூ.8 லட்சம்.. ஹோட்டல் வெயிட்டர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த வாடிக்கையாளர்!
நியூயார்க்: சுமார் 2,700 ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு 8 லட்ச ரூபாயை டிப்ஸாக வழங்கி, ஹோட்டல் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு நபர். இச்சம்பவம் நடந்தது அமெரிக்காவில்.
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில், மேசன் ஜார் கஃபே எனும் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிட வந்த மார்க் என்ற வாடிக்கையாளர், 32.43 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,700) மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு, பில் கொடுக்கும் போது அதில் டிப்ஸ்' எனக் குறிப்பிட்டு 10,000 டாலரை (சுமார் 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்) சேர்த்து வழங்கியிருக்கிறார்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன உணவு பரிமாறிய பணிப்பெண்ணான ஸ்வீனி, இது உண்மைதானா என சந்தேகமடைந்து, வெளியே சென்ற மார்க்கிடம் ஓடிப்போய் அழைத்து, கேட்டுள்ளார். தவறுதலாக எழுதிவிட்டீர்களா அல்லது உண்மைதானா என ஆச்சர்யத்தோடு கேட்டுள்ளார். அதற்கு மார்க், டிப்ஸ் தான் 10 ஆயிரம் டாலர் எனக் கூறி நெகிழ வைத்துள்ளார்.
வழக்கமாக சில டாலர்கள் டிப்ஸ் பெறும் பணிப்பெண் ஸ்வீனி, திடீரென 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டிப்ஸாக பெற்றதை நம்பாமல் ஆச்சர்யப்பட்டுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 100 டாலர் வரை டிப்ஸ் பெற்றிருக்கிறேன். அதனால், இவ்வளவு பெரிய தொகை டிப்ஸ் என்பதை நம்பவே முடியவைல்லை எனத் தெரிவித்துள்ளார் ஸ்வீனி.
10,000 டாலர் டிப்ஸ் கொடுத்தது ஏன்?: அண்மையில் தனது நண்பன் இறந்துவிட்டதால், அவரது நினைவாகத்தான் இந்த தொகையை டிப்ஸ் ஆக வழங்கியுள்ளேன் என 10 ஆயிரம் டாலர் டிப்ஸ் வழங்கிய வாடிக்கையாளரான மார்க் தெரிவித்துள்ளார். நண்பனின் இறுதிச் சடங்கிற்காகத்தான் இந்த நகருக்கு வந்தேன் என அவர் கூறியுள்ளார்.
தங்கள் வாழ்நாளில் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு டிப்ஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த டிப்ஸ் பணம் அன்று அந்த ஹோட்டலில் பணி செய்த 9 பணியாளர்களுக்கும் 1,100 டாலர் எனப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அந்த ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும் மகிழ்ந்துள்ளனர்.
பல மாதங்கள் ஆகியிருக்கும்: டிப்ஸ் பெற்றுக்கொண்ட ஸ்வீனி கூறுகையில், "எந்த நேரத்திலும் நீங்கள் கைகொடுத்து உதவி ஒருவரின் வாழ்க்கையை திடீரென மாற்றலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. அது ஒரு சிறிய செயலோ, பெரிய செயலோ, இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த 10,000 டாலர் பணத்தைச் சம்பாதிக்க எனக்குப் பல மாதங்கள் ஆகியிருக்கும்" எனக் கூறி உள்ளார்.
அந்த உணவகத்தில் பணிபுரியும் மற்றொரு பணியாளரான பைஜ் முலிக், "இது உண்மையில் மிகுந்த கருணையான செயல். இந்த டிப்ஸில் எனது பங்காக கிடைத்த தொகை மூலம் என் கல்லூரி படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு பகுதியைத் திரும்பக் கொடுத்துவிட்டேன். அந்த நாளில் பணி செய்த பல பெண்கள், கடின உழைப்பாளி தாய்மார்கள். அந்த தொகைக்குத் தகுதியானவர்கள்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications