கமலா தந்த அல்டிமேட் ரியாக்‌ஷன்.. அடுத்து செம விளாசல்..அசைவில்லாமல் நின்ற டிரம்ப்.. இதை எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, இன்று கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த காரசார விவாதம், உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில், டிரம்ப்பின் கேள்விகளை கமலா எதிர்கொண்டாரா? சரியாக சமாளித்தாரா? என்பது குறித்த கேள்விகளும் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர்கள் இருவருமே, விவாதத்தில் பேசும் உரையை வைத்துதான், யாருக்கு ஆதரவு தருவது என்று தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும்.. குறிப்பாக, யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாத வாக்காளர்களை அணுகுவதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பாக இந்த விவாதம் இருக்கும் என்பதால்தான், உலக அளவில் இந்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

donald trump kamala harris us presidential election 2024

டிரம்ப்: அந்தவகையில், இதற்கு முந்தைய விவாதத்தில் தன்னைவிட வயதான ஜோ பிடனை டிரம்ப், எதிர்கொண்ட நிலையில், இப்போது அவரை விட இளமையான, துடிப்பான கமலா ஹாரிஸை எதிர்க்கொள்வதால், இந்த விவாதத்தின் முக்கியத்துவம் பெருகி காணப்பட்டது. கடந்த ஜுன் மாதத்திலிருந்தே பிரச்சார களம் வெகுவாக மாறிவிட்டதால், இதன் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த விவாதமானது, தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்... விவாதத்தின்போது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் தங்கள் கருத்தை கமலாவும், டிரம்ப்பும் முன்வைப்பார்கள் என்றே கணிக்கப்பட்டது.

காரணம், எதிர் வேட்பாளரின் குறைகளையும் எடுத்துரைப்பதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும் என்பது விவாதத்தில் ஈடுபடும் தலைவர்களின் நம்பிக்கையாகும்.

முக்கியத்துவம்: கடந்த முறை, டிரம்ப்- பைடன் இடையே நடந்தபோது, நிறைய இடங்களில் டிரம்ப் திக்கித்திணறிப்போனார்.. இந்நிலையில், கமலா ஹாரிஸ்- டிரம்ப் இடையே விவாதம் நடக்கவும், டிரம்ப்பைவிட வயதில் குறைந்த கமலா, இதனை எப்படி சமாளிக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இன்றைய விவாதத்தில், பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் என்ற 3 முக்கிய விஷயங்களில் காரசார விவாதம் நடைபெற்றது.. மேற்கண்ட விவாதங்களில் டிரம்ப்பை சரமாரியாக விமர்சித்து கமலா பேசினார்.

டிரம்ப் தவறுகள்: "டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 வருஷம் தேவைப்பட்டது... நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம். டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீன ராணுவம் பலமடைந்துள்ளது.

டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்... கோடீஸ்வரர்களுக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார்... ஆட்சியை பைடன் கைப்பற்றியபோது, டிரம்ப் மோசமான பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார்.. சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார்... டிரம்பின் குழப்பத்தை நாங்கள்தான் சுத்தம் செய்தோம்" என்றெல்லாம் விவாதித்தார்.

தெளிவான பதில்: இந்த விவாதங்களை பொறுத்தவரை, டிரம்ப்பின் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் சளைக்காமல், அதேசமயம் தெளிவான பதில்களை கமலா முன்வைத்து கொண்டே இருந்தார்.. "குடியேற்றம்" பற்றின ஒரே விஷயத்தையே டிரம்ப் திரும்ப திரும்ப டார்கெட் செய்து கொண்டேயிருந்தபோதிலும், கமலா எதற்குமே அசரவில்லை.. "எல்லாம் பழைய கதை, நீங்க சொல்றது மொத்தமும் பொய்" என்று ஒரேடியாக போட்டு தாக்கி டிரம்பின் விமர்சனத்தை எதிர்கொண்டார் கமலா.

குறிப்பாக, பெண்கள் குறித்து கமலா பேசும்போது, அவரது பேச்சுக்களை உற்று கவனித்தார் டிரம்ப்.. "பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று டிரம்ப் சொல்லக்கூடாது.. பெண்களின் அடிப்படை உரிமைகளை அரசு நிர்ணயிக்க கூடாது.. பெண்கள் சுயமாக செயல்பட வேண்டும்.. உலக தலைவர்கள் டிரம்ப்பை பார்த்து சிரிக்கிறார்கள்.. கடந்த தேர்தலில் தோற்றபோது வன்முறையை தூண்டிவிட்டவர் டிரம்ப்.. அந்த கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்தவர் டிரம்ப்" என்று லிஸ்ட் போட்டு குறைகளை அடுக்கினார் கமலா.

மார்க்சிஸ்ட்: கமலா பேச பேச திணறிப்போன டிரம்ப், ஒரு கட்டத்தில் கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார். "கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட்... அவரது அப்பா மார்க்சிஸ்ட்" என்றார். இதைக்கேட்டு கமலா ஆவேசமாவார் என்று டிரம்ப் நினைத்தாரா தெரியவில்லை.. ஆனால், மெல்ல தலையை அசைத்தபடியே சிரித்து கொண்டிருந்தார் கமலா.

டிரம்ப்பை பொறுத்தவரை எப்போதுமே எதிர்தரப்பை பேச விடமாட்டார்.. குறுக்கே குறுக்கே இடைமறித்து பேசி, எதிர் தரப்பினரை திணறடிப்பதுதான் டிரம்ப்பின் சாதுர்யமாகும்.. கடந்த முறை விவாதத்திலும் இப்படித்தான் செய்தார். பைடனின் உச்சக்கட்ட வெறுப்புக்கு இதுதான் அப்போது பிரதான காரணமாகவும் அமைந்துவிட்டது எனலாம்.

மைனஸ் பாயிண்ட்: ஆனால், இந்த முறை, யார் பேசுகிறாரோ அவரது மைக் மட்டுமே ஆன் செய்யப்படும், எதிர் தரப்பினர் பேசும் போது மைக் ஆஃப் செய்யப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுவிட்டதால், இது டிரம்புக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

கமலா ஹாரிஸுக்கு ஏற்கனவே ஒபாமா, அதிபா் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரின் பலரது ஆதரவும் இருந்து வரும்நிலையில், கமலா ஹாரிஸுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

விமர்சனங்கள்: கமலாவிடம் வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை.. நான் அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா உக்ரைக்குள் நுழைந்திருக்காது.. கமலா அதிபரானால், இஸ்ரேல் என்ற நாடே காணாமல் போய்விடும் என்றெல்லாம் கமலா மீதான விமர்சனங்களை டிரம்ப் அடுக்கினாலும். இன்றைய தினம், தெளிவான பதில்கள் ஒவ்வொன்றையும் கமலா எடுத்துரைத்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. அதேசமயம் டிரம்ப்பை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல, என்றும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்!

எதிர்பார்ப்பு: இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸ அதிபரானால் 2 வருஷத்தில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று டிரம்ப் குற்றஞ்சாட்ட, இந்த பிரச்சனையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார், டிரம்புக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு.. தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார் என்று கமலா பதிலடி கொடுக்க, மொத்த விவாதமே அனல் பறந்தது. எனவே, ட்ரம்ப் - கமலா ஹாரிஸின் இந்த நேரடி விவாதத்துக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+