அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவு கோடியா? அம்பானி போனது இப்படித்தானா?
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்கும் விழாவிற்கான டிக்கெட் விற்பனை முடிந்துள்ளது. இதற்காக விற்கப்பட்ட டிக்கெட்களின் விலை உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் இன்று நடைபெறும், இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் முதல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முதல் வணிக அதிபர்கள் வரை உலகெங்கிலும் உள்ளவர்கள் பலர் பங்கேற்கிறார்கள். உலகின் டாப் 1 சதவிகிதத்தினர் மட்டுமே இதில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நிகழ்விற்காக 2,50,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்க அரசு வட்டார அறிக்கையின்படி, ஐந்து விதமான டிக்கெட் பேக்கேஜ்கள் வெளியிடப்பட்டு உள்ளன. $1 மில்லியன், $500,000, $250,000, $100,000 அல்லது $50,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த டிக்கெட்டுகளை காசிற்கு விற்பனை செய்யப்படாமல்.. டொனேஷன் என்ற அடிப்படையில் வழங்கப்படும். அதாவது டிரம்ப் அதிபர் தேர்தல் விவகாரங்களுக்கான டொனேஷன் என்ற அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது 8 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.
மேலே குறிப்பிட்ட டிக்கெட் இல்லாமல் 2 மில்லியன் தொகைக்கு மேலே டொனேஷன் வழங்கும் நபர்கள்.. நேரடியாக டிரம்ப் மற்றும் ஜே டி வான்சை சந்திக்க முடியும். இவர்கள் டிரம்ப் மற்றும் ஜே டி வான்சை சந்திப்பது மட்டுமின்றி.. அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் முடியும்.
இந்த விழாவிற்கான குழு இதுவரை $170 மில்லியனுக்கும் மேலாகத் திரட்டியுள்ளது, மேலும் $200 மில்லியனைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானி:
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ஜனவரி 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி குடும்பம் பங்கேற்று உள்ளது. அவர்கள் இதேபோல் 8 கோடி ரூபாய் வரை டொனேஷன் கொடுத்தே டிக்கெட் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் பதவியேற்பார். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றுள்ளன. ஆனால் இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த டிரம்ப் ஆட்சியில் மோடி - டிரம்ப் நெருக்கமாக நட்பாக இருந்தனர். ஹவுடி மோடி என்று டிரம்ப் - மோடி நிகழ்ச்சி கூட ஒன்றாக நடத்தினர். அதிலும் சொல்லப்போனால் ஹவுடி மோடி நிகழ்ச்சிதான் 4 வருடங்களுக்கு முன் டிரம்ப் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்., அதாவது அவர் தோல்வி அடைந்த 2021 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு இருவரும் நெருக்கம்.
இந்த முறை டிரம்ப் பெரிதாக மோடி பற்றியும் பேசவில்லை. ஆனால் இந்த முறை அழைப்பே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அது உண்மை என்றால் ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications