டிரம்ப் தந்த அல்டிமேட் ரியாக்‌ஷன்.. அசைவில்லாமல் நின்ற ஜோ பைடன்.. உற்று பார்த்த ட்ரம்ப்! செம விளாசல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டிரம்ப் வீடியோ ஒன்று நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?

உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்க்கும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது... இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது என்பது, அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கியமான நிகழ்வாகும்..

Donald Trump joe biden US Presidential election 2024 America

வேட்பாளர்: அந்தவகையில், நேற்று ஜார்ஜியாவிலுள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் ஆரம்பமானது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரும் இப்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 2 பேரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.

கடந்த 2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு, அதாவது 4 வருடங்கள் கழித்து, 2 தலைவர்களும் இப்படி நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. மொத்தம் 90 நிமிடங்கள் இவர்கள் 2 பேருக்கும் விவாதம் நீடித்தது...

சவால்: பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் ஆரம்பமானது.. பணவீக்கம் பிரச்சனை, வேலை வாய்ப்பின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா கால பிரச்சனைகள், பயங்கரவாதிகளின் அத்துமீறல்கள், அமெரிக்கப் படையினர் மரணங்கள் என ஒன்றுவிடாமல் எல்லா பிரச்சனையையும் டிரம்ப் எழுப்பினார்.. அதுமட்டுமல்ல, தான் அதிபராக இருந்தபோது, இதுபோன்ற பிரச்சனைகளை திறன்பட எதிர்கொண்டதாகவும் கூறினார்.

உடனே பைடனும், தான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். இறுதியில் டிரம்ப்பும், பைடனும் தங்களுக்கான ஆதரவை வாக்காளர்களிடம் கேட்டதுடன், ஆட்சி அமைந்தால் தங்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்றும் விளக்கமாக சொன்னார்கள்.

விவாதம்: அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்திகொண்டேயிருந்தபோது, இருவருமே தனிப்பட்ட தாக்குதல்களையும் தொடுத்து கொண்டனர்.. "My son is not a sucker.. you are sucker, you are a loser" என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.

பாலியல் வழக்கில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே வந்தவர்கள், திடீரென கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர்? என்ற விவாதத்தையும் முன்னெடுத்தனர்.

கம்மிய குரல்: இந்த பரபரத்த விவாதத்தின்போது, டிரம்ப் கேட்ட சில கேள்விகளுக்கு, பைடன் கம்மிய குரலில் பதிலளித்திருந்தார்.. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று குறித்து டிரம்ப் குற்றஞ்சாட்டி பேசும்போது, ஜோ பைடன் கொஞ்ச நேரம் அசைவின்றி ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.. இதனால், பைடன் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று பார்த்தார்..

பைடன் ஸ்தம்பித்து நிற்பதும், டிரம்ப் அவரை உற்று பார்ப்பதும்தான் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பைடன் இப்படி ஸ்தம்பித்து போய்விடுவது இது முதல்முறையல்ல என்கிறார்கள்.

வயது மூப்பு: 81 வயதாகும் பைடன், சமீபகாலமாகவே, வயது மூப்பின் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் தடுமாறுவதாகவும், அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவதாகவும் தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட வீடியோக்களும் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி உள்ளது.

மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்துள்ளார் என்று பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார் என்றாலும், நேற்றைய டிரம்புடனான விவாதத்தின்போது, சற்று அதிகமாகவே பைடனுக்கு தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அவரது குரல் தழுதழுத்திருந்ததை காண முடிந்தது என்றும் சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழலும் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

வைரல் வீடியோ: மொத்தத்தில், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து பைடனை டிரம்ப் விளாசியதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பைடன் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற டிரம்பின் வார்த்தைகள் அமெரிக்க அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+