Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமுக்குள்ளே.. வேலைக்கார பெண்ணை அழைத்த நபர்.. உள்ளே போய் பாத்தால்.. அதுவும் அந்த "டப்பா"வில்? அய்யயோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வேலைக்கார பெண்ணை இரவு நேரத்தில் ரூமுக்குள் அழைக்கவும், பதறிப்போய் ஓடிவிட்டார்.. கடைசியில் பார்த்தால் இப்படி ஒரு பயங்கரம் நடந்துள்ளது.

ஃபுளோரிடாவின் கோல்டன் கேட் எஸ்டேட் பகுதியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளைஞர் பெயர் கொரோடோ.. தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் இவர் வசித்து வந்தார்.

இவர் வீட்டில் வேலைக்கார பெண் ஒருவர் வேலைபார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று, வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார் அந்த பெண்.. அப்போது, கொரோடோ, அந்த பெண்ணை, தன்னுடைய ரூமுக்கு வருமாறு அழைத்துள்ளார்..

Do you know why did police arrest grandson and what happened in us couple

வேலைக்கார பெண்: பணி முடிந்தபிறகு, அதுவும் நைட் நேரத்தில், கொரோடோ அழைத்ததால், அந்த பெண் அலறியடித்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.. சிறிது நேரம் கழித்து, திடீரென காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டதால், ஓடிச்சென்று கதவை திறந்தார்.. அங்கே பார்த்தால், வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் கொரோடோ.. உடலெல்லாம் ரத்தத்துடன் காணப்பட்டார்.. முகம் முழுக்க வெறித்தனம் தென்பட்டது..

இதை பார்த்து அந்த பணிப்பெண் அலறவும், அவரை தரதரவென தன்னுடைய வீட்டிற்கு மறுபடியும் அழைத்து சென்றார் கொரோடோ. பெட்ரூம் வரை அந்த பெண்ணை தரதரவென இழுத்து சென்றார்..

அந்த ரூமுக்குள் நுழைந்ததுமே, ரத்த வாடை மூக்கை துளைத்தது.. பயந்தபடியே உள்ளே நுழைந்தார் அந்த பெண்.. அப்போது, டேபிள் மீது டப்பாவில் ஒரு தலை கிடந்தது.. அது அந்த வீட்டு பாட்டியின் தலை.. 65 வயதான தன்னுடைய பாட்டியை கொலை செய்துள்ளார் கொரோடோ... ரூம் சுவரெல்லாம் ரத்தக்கறை விழுந்திருந்தது.. தரையிலும் ரத்தம் சிதறிக்கிடந்தது..

ரூமெல்லாம் ரத்தக்கறை: அந்த கறையெல்லாம் துடைத்துவிட்டு, ரூமை சுத்தம் செய்து தருமாறு, பணிப்பெண்ணிடம் கேட்டார் கொரோடோ.. அதேபோல, சிசிடிவி கேமிராக்களில் கொலை செய்தது பதிவாகி இருந்ததால், அந்த சிசிடிவியை அகற்றவும், பதிவான காட்சிகளை நீக்கவும் தனக்கு உதவுமாறு கொரோடோ அந்த பெண்ணிடம் கேட்டார்.. மேலும், அறையை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தன்னுடைய காரில் தயாராக வைத்திருப்பதாகவும், அதை போய் எடுத்து வரும்படியும் அந்த பெண்ணிடம் சொன்னார்.

"சரி எடுத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, வேலைக்கார பெண்ணும், பயந்துகொண்டே ரூமை விட்டு வெளியேறினார்.. அப்போதுதான், அந்த வீட்டில் இருந்த தாத்தாவை காணவில்லையே என்று பதறிப்போனார்.. அங்கே ஒரு ரூம் பூட்டப்பட்டு இருப்பதையும் கவனித்துள்ளார்.. வெளியே செல்ல இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நினைத்த அந்த பெண், அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்..

வேகமாக ஓட்டிச்சென்றபோது, அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசாரை பார்த்தார்.. உடனே அவரிடம் சென்று நடந்த சம்பவத்தை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி உள்ளார்..

Do you know why did police arrest grandson and what happened in us couple

ரத்தம் தோய்ந்த நிலை: இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார், சம்பவ வீட்டிற்கு விரைந்து வந்தனர்.. அப்போது வீட்டிற்குள், ரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட கொரோடோவை பார்த்து மிரண்டனர்.. அவரது உடை, ஷூ, எல்லாவற்றிலும் ரத்தமாய் வழிந்து கொண்டிருந்தது.. போலீசாரை பார்த்ததுமே அங்கிருந்து ஓட முயன்றார்.. ஆனால், அவரை போலீசார் கைது செய்துவிட்டனர்.. விசாரணையையும் ஆரம்பித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, "சொந்த பாட்டியையே சுத்தியலால், அடித்து கொன்றுள்ளார் கொரோடோ.. கடுமையாக பலமுறை அடித்திருக்கிறார்.. அதேபோல தாத்தாவையும் சுத்தியலால் கடுமையாக தாக்கி, ஒரு ரூமில் அடைத்து பூட்டி வைத்துள்ளார்... நாங்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றால், தாத்தா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்..

என்ன காரணம்: அவரை காப்பாற்றுவதற்காக உடனடியாக மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். கொலை வழக்கு மற்றும் முதியோர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.. ஒரே நேரத்தில் தாத்தா - பாட்டி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த காரணம் என்னவென்று தெரியவில்லை.. விசாரித்து கொண்டிருக்கிறோம்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+