ஆடிய ஆட்டம் என்ன.. ரூ.12 லட்சம் கோடி போச்சு.. பஸ்பமான எலான் மஸ்க்கின் சொத்துக்கள்.. காரணம் டிரம்ப்
நியூயார்க்: டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கடுமையான நிதி இழப்பை சந்தித்துள்ளார். அரசியலில் அவர் கவனிக்கப்பட்டாலும்.. பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக மாறிவிட்டது.
முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.
அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.
டெஸ்லா சரிவு
அரசியலில் ஒரு பக்கம் கெத்து காட்டினாலும் இன்னொரு பக்கம் பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார். டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கடுமையான நிதி இழப்பை சந்தித்துள்ளார். அரசியலில் அவர் கவனிக்கப்பட்டாலும்.. பிஸ்னஸில் கடுமையான சரிவை சந்தித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் டெஸ்லா நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டல் 1.5 ட்ரில்லியன் டாலர் ஆகும். அப்போது ஷேர் விலை 479.86 டாலராக இருந்தது. அப்போது எலான் மஸ்க் சொத்து மதிப்பு 464 பில்லியன் டாலர். கடந்த 4 மாதங்களில் இந்த சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலர்கள் சரிந்து உள்ளது. இப்போது அவரின் சொத்து மதிப்பு 319 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பு படி ரூ.12 லட்சம் கோடி இவர் இழந்துள்ளார். ஆனால் இப்போதும் இவர்தான் உலகின் நம்பர் 1 பணக்காரர். 122 நாடுகளின் தனிப்பட்ட மொத்த உள்நாட்டு ஜிடிபி உற்பத்தியை விட இவர் இழந்த $145 பில்லியன் அதிகமாகும், இது 2025-26 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இவர் கடந்த 4 மாதங்களில் இழந்து உள்ளார். நாசாவின் ஆண்டு பட்ஜெட்டை விட சுமார் ஆறு மடங்கு அதிகம் இது.
காரணம் டிரம்ப்
சமீபத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பாரம்பரிய எண்ணெய்களை எடுக்கும் வகையில் அமெரிக்க அரசின் கொள்கையை மாற்றினார். அதாவது இவி வாகனங்களுக்கு பதிலாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பாரம்பரிய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கொள்கைகளை மாற்றினார். அப்போது தொடங்கிய எலான் மஸ்க்கின் டெஸ்லா சரிவு தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இவி வாகனங்கள் அமெரிக்காவில் வேகமாக சரிவு சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications