Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையில் கரண்டியுடன் "இந்தியர்" கிட்ட வந்து நின்ற டிரம்ப்.. அடுத்தடுத்து ஒரே சர்ப்ரைஸ்.. கவனித்த கமலா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், ஓட்டல் ஒன்றிற்குள் நுழைந்து டிரம்ப் செய்த காரியம், பலரையும் திகைப்பில் ஆழ்த்திவிட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி தேர்தல் நடக்க போகிறது.. தற்போதைய ஜோ பிடன் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல், அமெரிக்காவில் நடக்க உள்ளது.

donald trump us presidential election 2024

தீவிர பிரச்சாரம்: இந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியிருக்கிறார்.. இதற்கான தீவிர பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.. ஒபாமா செல்லுமிடமெல்லாம் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதேபோல, முன்னாள் அதிபர் டிரம்ப்பும், பதிலுக்கு களமிறங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

டிரம்ப்: தேர்தல் நேரத்தில் வழக்கமாக நம்ம ஊர் அரசியல்வாதிகள் செய்யும், யுக்திகளையே டிரம்ப்பும் கையில் எடுத்துள்ளார். விதவிதமான டிரஸ்களில், விதமான ஐடியாக்களை பயன்படுத்தி, வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.. அந்தவகையில், பென்சில்வேனியா மாகாணத்திற்கு பிரச்சாரம் சென்ற டிரம்ப், திடீரென அங்கிருந்த மெக்டோனால்ட்ஸ் பாஸ்ட் புட் கடை ஒன்றிற்குள் நுழைந்துவிட்டார்.

அங்கு ஏராளமானோர் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தனர்.. அவர்களுக்கு ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் செய்து தரலாம் என்று முடிவு செய்தார் டிரம்ப்.. ஆனால், டிரம்ப்புக்கு ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் செய்ய தெரியாது போல..

ஓட்டல் ஊழியர்கள்: அதனால், அங்கிருந்த ஊழியா்களிடம் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் எப்படி செய்வது என்று கற்றுக் கொண்டு, அதற்கு பிறகு தன் கையாலேயே செய்து, அங்கிருந்த கஸ்டமர்களுக்கு தந்து சாப்பிட சொன்னார்.

மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்ததுடன், இதுகுறித்து எக்ஸ் தளத்திலும் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் டிரம்ப்.. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் மெக் டொனால்ட் நிர்வாகியிடம், "எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை" என்று டிரம்ப் கேட்கிறார்.. அதற்கு பிறகுதான், ஃபிரன்ச் ஃபிரைஸ் தயாரித்து, கஸ்டமர்களுக்கு வழங்குகிறார்.

ரிசல்ட் என்ன: குறிப்பாக, மெக்டோனால்ட்ஸ்-க்கு வருகை தந்திருந்த இந்தியருக்கு, அந்த உணவை பரிமாறினார்.. ட்ரம்பை பார்த்ததுமே ஆச்சரியமடைந்த அந்த இந்தியர், ட்ரம்ப்புக்கு கைகொடுத்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.. மேலும், ட்ரம்ப்பை "Mr. President" என்றும் அந்த நபர் அழைத்திருக்கிறார்.

எவ்வளவுதான், முட்டிமோதி கரண்டியை பிடித்து சமைத்து போட்டாலும், இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தான் அதிபராக வெற்றி பெறுவார் என்று பெரும்பாலான கணிப்புகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+