முரட்டு தூக்கத்தை வெள்ளை மாளிகையில் போட்ட டிரம்ப்! அதுவும் உட்கார்ந்துட்டே.. கண்ணை மூடி சிந்தித்தாரோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நியூயார்க்: Dozy Don என்று அன்று முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனை, டிரம்ப் கிண்டலடித்த நிலையில், இன்று டிரம்புக்கே அப்படியொரு விமர்சனம் ஏற்பட்டுள்ளது.. வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வில் டிரம்ப் செய்த செயல், இணையத்தில் வீடியோ, போட்டோவாகவும் வெளிவந்து கவனம் பெற்று வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரையில், அந்நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் யாராக இருந்தாலும், முழு ஆரோக்கியத்துடன், பூரண உடல்நிலையுடன் இருந்தால்தான் நாட்டை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதே அம்மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.

White House Donald Trump

டிரம்ப் உடல் நிலை

அந்த காலகட்டத்தில் இருந்தே, அமெரிக்க அதிபரின் உடல்நிலைகள் எப்போதுமே உற்றுக் கவனிக்கப்படும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில், தற்போதைய அதிபர் டிரம்ப்பின் உடல்நிலையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது..

ஏற்கனவே டிரம்ப்பின் இடது கையில் காயம் இருந்தது அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.. பிறகு மீண்டும் அவரது வலது கையின் பின்புறத்தில் ஒரு சிறிய காயம் தென்பட்டது.. இந்த காயங்கள் அனைத்துமே அவரது உடல்நிலை குறித்த கவலைகளை அப்போது எழுப்பியிருந்தது..

ஊசி போடும்போது இப்படியான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் காரணம் கூறியிருந்தனர்... ஆனால் அடுத்த குறுகிய காலத்திலேயே, டிரம்ப் கால் வீக்கத்துக்கும் ஆளானார்...

கால்களில் வீக்கம்

சமீபத்தில் குரோனிக் வெனஸ் இன்சபிசியன்சி (CVI) எனப்படும் சிக்கலான நரம்பியல் நோயால் டிரம்ப் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. 79 வயதான டிரம்ப் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, ரத்த ஓட்ட குறைபாடு காரணமாக அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்டதாகவும், இதனை விரிவாக கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் நிற்பது, உடல் பருமன், வயது மற்றும் உடற்பயிற்சி குறைவு போன்ற காரணிகளால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. எனினும், வீக்கம், வலி, தோல் நிறம் மாறுதல் போன்றவை தீவிரமாகும் முன்பு இதற்கு சிகிச்சை தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டே தூங்கி உள்ளார்.. தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போதுதான் டிரம்ப் உட்கார்ந்து கொண்டே தூங்கியிருக்கிறார். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

வெள்ளை மாளிகையில் முரட்டு தூக்கம்

சேரில் உட்கார்ந்து கொண்டே குட்டித் தூக்கமா? மீட்டிங் நடக்கும்போதே தூங்கிவிட்டாரா என்றெல்லாம் இணையவாசிகள் கிண்டலடித்து வருகிறார்கள்.. சிலர் டிரம்ப் தூங்கும் போட்டோக்களை வைத்து மீம்ஸ்களாகவும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

எனினும், டிரம்ப் உட்கார்ந்து கொண்டே தூங்குவது, அரசியல் ரீதியாகவும் எதிரொலிக்க துவங்கியிருக்கிறது.. டிரம்பின் உடல்நிலை கவலை தருவதாகவும், அதுவும் பணி நேரத்திலேயே அவரது செயல்பாடு அதிருப்திகரமானது என்று டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

கண்ணை மூடி சிந்தித்த தருணம்

ஆனால் இந்த கருத்துக்களை டிரம்ப் கட்சியினர் மறுக்கிறார்கள்.. "டிரம்ப் ஒன்றும் தூங்கவில்லை.. அவர் கண்களை மூடி சிந்தித்த தருணமே அது" என்று விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வியாழனன்று, உடல் எடை குறைப்புக்கான மருந்து பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றபோது, லேசாக கண்ணை சிந்தித்தார்.. உடனே இது தொடர்பான போட்டோக்களை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.. டிரம்ப் எப்போது தூங்குகிறார் என்றே தெரியாது, எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கிறார்" என்று டிரம்ப் கட்சியினர் சொல்லி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+