கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்.. அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு அவப்பெயரா? அவர் செய்த தவறு இதுதான்
நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டில் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவியல் வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். அநேகமாக ஒரு சில நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் வழக்கை இதற்கு முன்னர் எந்த அதிபரும் எதிர்கொண்டது கிடையாது. டிரம்ப்தான் இந்த வழக்கை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபராவார்.
குடியரசு கட்சியை சேர்ந்த 76 வயதான டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-2021ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இவர் 2016ம் ஆண்டு தேர்தலுக்கு பிரசாரம் மேற்கொண்டபோது இவருக்கும் ஆபாச பட நடிகையான 44 வயதான ஸ்ட்ரோமி டேனியல்ஸ் உடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டதாக ஸ்ட்ரோமி டேனியல்ஸ் குற்றம் சாடினார். இந்த விவகாரம் வெளியில் கசியாமல் இருக்க ஸ்ட்ரோமி டேனியல்ஸுக்கு டிரம்ப் ரூ.1 கோடி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதுவரை பிரச்னையில்லை. ஆனால் இந்த ரூ.1 கோடியை தனது கட்சியின் பிரசார நிதியிலிருந்து வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போது பெரும் பிரச்னையாக வெடித்திருக்கிறது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிரம்ப் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி கைது செய்யப்பட்டால் குற்றவியல் வழக்கில் கைதான முதல் முன்னாள் அதிபர் என்கிற பெயரை டிரம்ப் பெறுவார். அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படி நடந்தது கிடையாது.












Click it and Unblock the Notifications