கருப்பு + வெள்ளை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறவெறி அரசியல்.. கமலாவுக்கு கன்டென்ட் கொடுத்த டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகிய நிலையில், தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், இவருக்கு எதிராக இன ரீதியான விமர்சனங்களை டொனால்ட் டிரம்ப் கையில் எடுத்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நிலை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

டிரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே போட்டி தீவிரமடைந்திருக்கிறது. பிரசாரங்கள் சூடுபிடித்திருப்பதால் யார் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படி இருக்கையில் டிரம்பின் பிரசாரம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் கமலாவுக்கு எதிராக டிரம்ப், இன ரீதியான விமர்னங்களை எழுப்பியிருக்கிறார். இது பல்வேறு தரப்பினரிடமிருந்து அதிருப்திகளை உருவாக்கியுள்ளது.
சிகாகோவில் தேசிய கருப்பின பத்திரிக்கையாளர் மாநாட்டில் பங்கேற்றிருந்த டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். இதில் அவர் பேசியதாவது, “கமலா ஹாரிஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அவரை அறிந்திருக்கிறேன். ஆனால் விஷயம் என்னவெனில் அவர் எப்போதுமே இந்திய பாரம்பரியத்தை கொண்டவர். இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார்.
இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான்” என்று கூறியிருக்கிறார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை தெரிவித்திருக்கின்றனர்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனால் கமலாவின் தந்தை டொனால்ட் ஜாஸ்பர் ஹாரிஸ் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். இருவருமே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications