ஸ்விங் ஸ்டேட்டஸ்தான் முக்கியம்! இதை பிடிச்சா வெற்றி உறுதி! ட்ரம்ப் vs கமலா.. முன்னிலை வகிப்பது யார்?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில் ஸ்விங் ஸ்டேட்டஸ்களில் டிரம்ப் - கமலா இடையே யார் முன்னிலை வகிக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 11 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்விங் ஸ்டேட்டஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது சிவப்பு ஸ்டேட்.. நீல ஸ்டேட்ஸ் என்று இருக்கும். அதாவது பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள்.. இல்லை ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள். இது போக சில மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வாக்களிக்கும்.
இப்படிப்பட்ட மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று அழைக்கப்படும். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், 50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை.. அதாவது எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
தேர்தல் எப்படி நடக்கும்: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக எலக்டர்ஸ் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும்
ஸ்விங் ஸ்டேட்டஸ் முக்கியம்: இப்படிப்பட்ட நேரத்தில் ஸ்விங் ஸ்டேட்டஸ்தான் மிக முக்கியம். அதன்படி தற்போது ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று கருதப்படும் 7 ஸ்விங் ஸ்டேட்டஸ்களில் ட்ரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார். AtlasIntel's வெளியிட்ட கணிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 7 மாகாணங்களில் நடத்தப்பட்ட கணிப்பில்.. பதிலளித்தவர்களில் சுமார் 49% பேர் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிப்போம் என்று கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை விட டிரம்ப் 1.8% வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் 2500 பேருக்கும் அதிகமானோரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அரிசோனாவில், டிரம்ப் 51.9% வாக்குகளை பெறுவார். கமலா ஹாரிஸ் 45.1% வரை வாக்குகளை பெறுவார்.
நெவாடாவில், அதிபர் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கேட்டபோது, 51.4% வாக்காளர்கள் டிரம்பைத் தேர்ந்தெடுத்தனர், 45.9% பேர் ஹாரிஸைத் தேர்ந்தெடுத்தனர்.
வட கரோலினாவில், டிரம்ப் 50.4% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் ஹாரிஸ் 46.8% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில், ஜனாதிபதித் தேர்தல்கள் மூன்று வகையான மாநிலங்களால் பிரிக்கப்படும்.: சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் மற்றும் ஸ்விங் மாநிலங்கள். 1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் நீல மாநிலங்கள். இந்த மாநிலங்கள் பொதுவாக அவர்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கணிக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
ஸ்விங் மாநிலங்களில், குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவும் மாநிலங்கள். இங்கே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications