சோலி முடிஞ்சது.. அமெரிக்க குடியுரிமையை இனி அவ்வளவு எளிதாக பெற முடியாது.. டிரம்ப் போட்ட உத்தரவு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதாக உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள நடைமுறையை அமெரிக்கா கைவிடுவதாக அறிவித்து உள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறைபடுத்தி உள்ளார்.
இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான் முடிவை எடுக்க உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.
நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.
நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.
அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications