ரஷ்யா மீது அணுகுண்டு போடும் அமெரிக்கா? 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்.. பதற்றம் நீடிப்பு
நியூயார்க்: ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா அருகே அனுப்பி வைத்துள்ளார். இதனை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் ரஷ்யா - அமெரிக்கா இடையே பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் தற்போது வரை டிரம்பால் போரை நிறுத்த முடியவில்லை.

இதனால் ரஷ்யா மீது டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா இன்னும் அதிகப்படுத்தும் என்று கூறி உள்ளார். இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிடி கொடுக்கவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறார். இதனால் உக்ரைனுக்கு புதிய ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவை குறிவைத்த டிரம்ப்
இது ஒருபுறம் இருக்க திடீரென்று ரஷ்யாவை நோக்கி 2 நீர்மூழ்கி கப்பல்களை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். இந்த நீர்மூழ்கி கப்பல்கள் சாதாரணமானவை இல்லை. அந்த நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து அணுஆயுத தாக்குதல்களை நடத்த முடியும். இதனால் ரஷ்யா மீது அணுஆயுத தாக்குதலை அமெரிக்கா நடத்த திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி டிரம்பின் இந்த நடவடிக்கை ரஷ்யா - அமெரிக்கா இடையே பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
உறுதி செய்த டிரம்ப்
இந்த திடீர் நடவடிக்கை பற்றி டொனால்ட் டிரம்ப் தனது இந்த நடவடிக்கை பற்றி ட்ரூத் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛ ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், ரஷ்யாவின் தற்போதைய செக்யூரிட்டி கவுன்சிலின் துணை தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2 அணுஆயுத நீர்மூழ்கிகப்பல்களை ரஷ்யா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். மேலும் அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் உங்களின் கவனத்துக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
டிமிட்ரி என்ன சொன்னார்?
இதன்மூலம் ரஷ்யா செக்யூரிட்டி கவுன்சில் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவின் கருத்தால் தான் டிரம்ப் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த டிமிட்ரி மெட்வெடேவின் என்பவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு டிரம்ப் 25 சதவீத வரியை விதித்தது, ரஷ்யா - இந்திய பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்று கூறியதும் இருவருக்கும் இடையே பிரச்சனையாக மாறியது.
இந்த விஷயத்தில் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெட்வெடேவ் , ‛‛இந்தியா - ரஷ்யாவின் செத்துப்போன பொருளாதாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்பு அவர் தனது பேவரைட் திரைப்படமான ‛தி வால்கிங் டெட்' பற்றி நினைத்து பார்க்க வேண்டும். அதேபோல் ‛டெட்ஹேண்ட்' எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் நினைத்து பார்க்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
‛டெட் ஹேண்ட்’ என்பது என்ன?
ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்கா மிரட்டி வருவதால் கோபமான அவர் , ‛‛ரஷ்யாவின் "டெட் ஹேண்ட்" எனும் சிஸ்டம் பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தானாகவே அணுஆயுத தாக்குதலை தொடங்கும் வகையில் உருவாக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது பனிப்போர் காலத்தில் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்நிலையில் தான் அதனை டிமிட்ரி குறிப்பிட்டு அமெரிக்காவை சீண்டியிருந்தார். இதனால் கோபமான டொனால்ட் டிரம்ப் அணுஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யாவை நோக்கி அனுப்பி வைத்துள்ளார். இது இருநாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications