ஐடி ஊழியர்களுக்கு தான் ஆப்பு.. கேப் விடாமல் அடிக்கும் ட்ரம்ப்! இனி அமெரிக்கா போவது கனவு தானா?
நியூயார்க்: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சி மீண்டும் ஹெச்1பி விசா தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்த்து வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் பெரும் கவலை நிலவுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு பிரச்சனை தற்போதைக்கு இல்லை என்றாலும், விசாவைப் புதுப்பிக்கும் போது சில சிக்கல்கள் எழலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பம், மென்பொருள், மருத்துவம் போன்ற துறைகளில் வேலை செய்ய H-1B விசா முக்கியமான வாயிலாக உள்ளது. இந்தியாவிலிருந்து பெரும்பாலான ஐ.டி. நிறுவன ஊழியர்கள் இந்த விசாவை பயன்படுத்தியே அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையைச் சேர்ந்தவர்கள், இந்த விசா மூலம் அமெரிக்கா செல்கின்றனர். தற்போதைய சூழலில், இந்தியர்கள் மட்டுமல்லாது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஹெச்1பி விசா மூலம் அங்கு பணியாற்றுகின்றனர்.

ஹெச்1பி விசா
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா வழங்கும் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விசா விண்ணப்பங்கள் மட்டுமல்ல, ஏற்கனவே விசா பெற்றிருப்பவர்களும் மீண்டும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்கள் - இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்றவை, அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணியமர்த்தி வைத்துள்ளன.
டிரம்ப் அமெரிக்கா
இவர்களில் பெரும்பாலானோர் ஹெச்1பி விசா வைத்தே அங்கு உள்ளனர். டிரம்பின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால், இவர்களுக்கு வேலை நிலைத்தன்மை குறையும் அபாயம் அதிகமாகும்.
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் திடீரென நாடு கடத்தப்படுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், விசா நீட்டிப்பு பெறுவது கடினமாகலாம். குறிப்பாக, குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வரும் ஐடி ஊழியர்கள் மீண்டும் புதுப்பிப்பு செய்யும்போது சிக்கல் ஏற்படும் அபாயம் அதிகம்.
இந்திய ஐடி ஊழியர்கள்
இந்த சூழ்நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் அதிக பணியாளர்களை நேரடியாக அமெரிக்கர்களிடமிருந்து வேலைக்கு எடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், இந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளும் தீவிரமடையும். டிரம்பின் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், அமெரிக்கா செல்லும் கனவை கைவிடச் செய்தாலும், இந்திய ஐடி துறைக்கு புதிய வேலை வாய்ப்பு மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடியேற்றம்
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாவின் ஆண்டு கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சமாக உயர்த்தி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்1 பி விசா எடுத்து பணிபுரிந்து வரும் ஐடி ஊழியர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications