Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க குடியுரிமையில் கை வைக்கும் டிரம்ப்.. இந்தியர்களுக்கு பெரிய சிக்கல்.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள்.

இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று 47வது அதிபராகும் டொனால்ட் டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்தி உள்ளார்.

டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.

நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.

நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.

அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+