அதிபராக டிரம்ப் எப்போது பதவி ஏற்பார்? கைக்கு போகும் அணு ஆயுத பவர்! ரெடியாகிறது நியூக்ளியர் புட்பால்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப்.. ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். அன்று விடுமுறை தினம் இல்லை என்பதால் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும்.

இப்போது அதிபராக டொனால்ட் டிரம்ப் வென்று இருந்தாலும்...ஜனவரி 20ம் தேதி வரை அவருக்கு அதிபருக்கான பவர் இருக்காது. ஆனால் பாதுகாப்பு அதிபருக்கு இணையாக வழங்கப்படும். அதே நாள் அமெரிக்க துணை அதிபரும் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஜனவரி 20ம் தேதி விடுமுறை தினம் இல்லை என்பதால் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும். அன்று அவரிடம் அணு ஆயுத புட்பால்" மற்றும் "பிஸ்கட்" வழங்கப்படும்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

அமெரிக்காவில் அணு ஆயுத தாக்குதலை நடத்த அதிபர்தான் உத்தரவிட முடியும். அதாவது ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் உத்தரவிட முடியும். இதற்காக அதிபருடன் இருக்கும் இரண்டு விஷயங்கள்தான் "புட்பால்" மற்றும் "பிஸ்கட்".

அணு ஆயுத புட்பால் என்பது அமெரிக்க அதிபரிடம் இருக்கும் ஒரு கருப்பு நிற பெரிய சூட்கேஸ் ஆகும். இதை அதிபருடன் எப்போதும் இருக்கும் ஒரு ராணுவ உயர் அதிபர் வைத்து இருப்பார். 20 கிலோ எடை கொண்ட இந்த சூட்கேஸ் மூலம் அணு ஆயுத தாக்குதலை எங்கிருந்து வேண்டுமானாலும் நடத்த உத்தரவிட முடியும். ஆனால் இதில் தாக்குதலை நடத்துவதற்கான சிவப்பு நிற பொத்தான் எல்லாம் இருக்காது. இந்த புட்பால் செயல்படும் விதம் கொஞ்சம் விசித்திரமானது.

ஒரு நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த விரும்பினால் இந்த புட்பாலை திறந்து அமெரிக்க அதிபர் அணு ஆயுத தாக்குதல் நடத்த உத்தரவிடலாம். இந்த உத்தரவு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இந்த உத்தரவை சோதனை செய்துவிட்டு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். இந்த உத்தரவு புட்பாலில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு அறைக்கு எப்படி செல்லும் என்பது மட்டும் ராணுவ ரகசியம். அதேபோல் இந்த உத்தரவு எப்படி கொடுக்கப்படும் என்பது குறித்தும் நிறைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த புட்பால் மூலம் அதிபர் அணு ஆயுத தாக்குதலை உத்தரவிட வேண்டும் என்றால் அதற்கு அவர் ஒரு பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டும். இந்த பாஸ்வேர்ட் அதிபர் பிடனிடம் தற்போது உள்ளது. கிரெடிட் கார்ட் போன்ற கண்ணாடி அட்டையில் இந்த பாஸ்வேர்ட் இருக்கும். இந்த கண்ணாடியை உடைத்தால் உள்ளே பாஸ்வேர்ட் இருக்கும். இந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் அதிபர் உத்தரவை உறுதி செய்து ராணுவ கட்டுப்பாட்டு மையம் அணு ஆயுத தாக்குதலை நடத்தும்.

இந்த பாஸ்வேர்ட் அடங்கிய அட்டைக்கு பெயர்தான் பிஸ்கட். இந்த பிஸ்கட்டும் - புட்பாலும்தான் அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்யும். ஒரு அதிபர் விபத்தில் இறந்துவிடுகிறார் என்றால் உடனே அவரின் பிஸ்கட் பாஸ்வேர்ட் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டு துணை அதிபரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும். இருவரும் ஒன்றாக விபத்தில் இறந்தால் காங்கிரஸ் அவையின் ஸ்பீக்கரின் பாஸ்வேர்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.

ஆனால் இவர்கள் மூவரும் இறந்து போனாலும் கூட அமெரிக்காவில் இருக்கும் "டேசிக்னேடட் சர்வைவர்" எனப்படும் அதிபர் பொறுப்பை ஏற்க தகுதியான அடுத்த கட்ட உயர் அதிகாரியிடம் (பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள்) இந்த பிஸ்கட் மற்றும் புட்பால் கொடுக்கப்படும். ஆகவே ஒரே நேரத்தில் 3-4 புட்பால் எப்போதும் தயாராக இருக்கும்.

பொதுவாக ஒரு அதிபரின் ஆட்சி முடிந்து புதிய அதிபர் பதவி ஏற்கும் போது பழைய அதிபர் கண் முன்னே புதிய அதிபரிடம் இந்த புட்பால் கொடுக்கப்படும். அதேபோல் புதிய அதிபரிடம் பிஸ்கட் கொடுக்கப்பட்டு அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுக்கப்படும். பதவி ஏற்பு விழாவின் ஒரு பகுதியாக இது நடக்கும்.

முன்னதாக முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி சுடப்பட்ட போது இந்த பிஸ்கட் பாஸ்வேர்ட் காணாமல் போனது. அதேபோல் பில் கிளிண்டன் தனது பாஸ்வேர்ட் பிஸ்கெட்டை பல மாதங்களாக தொலைத்துவிட்டு தேடியதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும். அன்று அவரிடம் அணு ஆயுத புட்பால்" மற்றும் "பிஸ்கட்" வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+